கோத்தா பாரு, ஏப்ரல் 13: பள்ளி ஒன்றின் வளாகத்தில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வாகனம் மோதியதாக நம்பப்படும் சம்பவத்தில், படிவம் ஒன்று மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் அத்தை, 43 வயதான ஸுரைஃபா நூர் கூறுகையில், 13 வயதான நூர் பாதிமாத்துல் ஹவா முகமட் அஸாவுதீனையும், அதே பள்ளியில் பயிலும் அவரது சகோதரர் 15 வயதான முகமட் அலி முஸ்தாக்கிமையும் அழைத்துச் செல்வது தனது தினசரி வழக்கம் என்றும், ஆனால் நேற்று அவர்கள் காருக்கு வரத் தாமதமானதாகவும் தெரிவித்தார்.
"திடீரென, தனது தங்கை இறந்துவிட்டதாக முகமட் அலி முஸ்தாக்கிம் என்னிடம் தெரிவித்தார். நான் அதிர்ச்சியடைந்து, உடனடியாக சூராவுக்கு (சம்பவம் நடந்த இடமாக நம்பப்படுகிறது) விரைந்தேன்," என்று அவர் குபாங் கெரியானில் உள்ள மலேசிய அறிவியல் பல்கலைக்கழக சிறப்பு மருத்துவமனையின் தடயவியல் பிரிவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
பள்ளி சூராவில் ஜுஹர் தொழுகையை முடித்துவிட்டு வெளியேறியபோது, நூர் பாதிமாத்துல் ஹவா மீது வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் தாயாரும், தனது சகோதரியுமான சித்தி மஹேரான் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததிலிருந்து, மறைந்த மாணவியைத் தானே கவனித்து வருவதாக ஸுரைஃபா கூறினார்.
இச்சம்பவத்தை கோத்தா பாரு மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் முகமட் அஸ்மிர் டமிரி உறுதிப்படுத்தினார்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை, 43 வயதான முகமட் அஸாவுதீன் அப்துல்லா, கம்போங் செப்பாவில் பணியில் இருந்தபோது ஸுரைஃபா தொலைபேசி மூலம் இத்தகவலைத் தெரிவித்ததாகக் கூறினார்.
"பள்ளிக்கு வரும் வரை எனக்கு உண்மை என்னவென்று தெரியாது. பள்ளிக்கு வந்தவுடன், நேராக சூராவ் பகுதிக்குச் சென்றேன். அங்கே எனது மகள் அசைவற்று இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்," என்ற அவர், தனது மகளுக்கு உரிய நீதி கிடைக்கும் என தெரிவித்தார்.
பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, அவரது மகளின்உடலை தஞ்சோங் மாஸ் இஸ்லாமிய கல்லறையில் அடக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளி வளாகத்தில் வாகனம் மோதியதில் மாணவி உயிரிழப்பு
13 ஏப்ரல் 2026, 1:50 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
பந்திங்கில் மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம்: வெளிவட்டாரக் குழுக்களின் தொடர்பு உள்ளதா? காவல்துறை விசாரணை
Shalini Rajamogun
21 ஜூலை 2026

selangor
1,200க்கும் மேற்பட்ட மாணவர் ஒழுங்கீனச் சம்பவங்கள்; பள்ளி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
Nur Aishah Mohd Amin
3 செப்டெம்பர் 2026

national
பண்டார் உத்தாமா மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்ட மாணவன் தரப்பு விசாரணை நிறைவு
Bernama
26 ஆகஸ்ட் 2026

antarabangsa
பிலிப்பைன்ஸ் பள்ளியில் துப்பாக்கிச் சூடு: இரு மாணவர்கள் உயிரிழப்பு
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



