செகாமட், ஏப்ரல் 7: கடந்த வாரம் கெமாஸ் பாரு, தாமான் கோல்டன் ஹில் சந்திப்புக்கு அருகிலுள்ள ஜோகூர் பாரு-சிரம்பான் சாலையின் 212வது கிலோமீட்டரில் மூன்று பேரைக் கொண்ட ஒரு குடும்பத்தின் மரணத்திற்குக் காரணமான டிரெய்லர் லோரி ஓட்டுநர் மீது இன்று இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்ட 29 வயதான முஹமட் ஷாபிக் சல்லே, மாஜிஸ்திரேட் அமலினா ஜோஹர் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது, அவர் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார்.
இருப்பினும், இந்த வழக்கு உயர் நீதிமன்ற அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி பிற்பகல் 3.50 மணியளவில், 72, வயது கி. மியாகிருஷ்ணன், அவரது மனைவி, எஸ். செவந்தை, 65, மற்றும் செவந்தியின் சகோதரர், எஸ். பழனியாண்டி, 75, ஆகியோரைக் கொலை செய்ததாக அவர் மீதுகுற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குற்றத்திற்காக, மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, மற்றும் மரண தண்டனை விதிக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் 12 பிரம்படி ஆகியவற்றை வழங்கும் குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் அவர் மீது குற்றஞ்சாட்டப் பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப் படவில்லை. பிரேதப் பரிசோதனை, மருத்துவம், தடயவியல், நோயியல் மற்றும் புஸ்பக்கோம் அறிக்கைகளைப் பெறுவதற்காக வழக்கின் மறு விசாரணைக்கு மே 21 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்தது.
வழக்குத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் நூர் ‘அய்னா முஹம்மது இஸ்மாயில் தாட்ஜ் ஆஜரானார், அதே நேரத்தில் குற்றஞ்சாட்டப் பட்டவர் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை.
இந்தச் சம்பவத்தில், கெமாஸ் பாரு, தாமான் கோல்டன் ஹில் சந்திப்பில் பாதிக்கப் பட்டவர்கள் பயணித்த வேனின் பின்பகுதியை ஒரு டிரெய்லர் லோரி மோதியதில், கணவன்-மனைவி உட்பட மூவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதற்கிடையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரி நிறுவனத்தின் மீது உடனடி தணிக்கை மற்றும் விசாரணையை மேற்கொள்ளுமாறு சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) மற்றும் தரைவழிப் பொதுப் போக்குவரத்து நிறுவனம் (APAD) ஆகியவற்றிற்கு உத்தரவிட்டுள்ளார்.
மெத்தம் பெட்டமைன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சோதனையில் உறுதி செய்யப் பட்ட ஓட்டுநரின் ஒழுக்கத்தைக் கண்காணிக்கத் தவறியதற்காக நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்றும், கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் லோக் கூறினார்.
https://mediaselangor.com/ms/2026/04/350951
ஒரு குடும்பத்தை சார்ந்த மூவர் மரணத்திற்குக் காரணமான டிரெய்லர் லோரி ஓட்டுநர் மீது கொலை குற்றச்சாட்டு.
7 ஏப்ரல் 2026, 7:35 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
கைப்பேசி தகராறில் நண்பரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
Pakiya
18 மார்ச் 2026

selangor
ஜூன் மாதத்திற்குள் LRT3 ரயில் சேவை தொடக்கம்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தகவல்
Mavitthran
23 பிப்ரவரி 2026

national
சிகாமாட்டில் வலுவற்ற நிலநடுக்கம்
Shalini Rajamogun
4 நவம்பர் 2025

national
சிகாமாட் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 3,000 ரிங்கிட் நிதியுதவி
Shalini Rajamogun
11 செப்டெம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?




