இஸ்கண்டார் புத்ரி, செப் 11 - ஜோகூர், சிகாமாட் மாவட்டத்தில் நிகழ்ந்த தொடர் மிதமான நிலநடுக்கங்களில் 62 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சம் தலா 3,000 ரிங்கிட்டை அம்மாநில அரசாங்கம் வழங்கவுள்ளது.
மத்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் தேசிய பேரிடர் நிர்வகிப்பு நிறுவனம், நட்மா மூலம் அந்த உதவிநிதி வழங்கப்படும் என்று ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் கானி தெரிவித்தார்.
இதை சட்டமன்றக் கூட்டத்தின் கேள்வி பதில் நேரத்தின்போது டத்தோ ஒன் ஹஃபிஸ் இத்தகவல்களைக் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி ஏற்பட்ட முதல் நிலநடுக்கத்திற்குப் பிறகு, அனைத்து நிறுவனங்கள் மற்றும் கிராமத் தலைவர்களை ஒன்றிணைத்து, மாவட்ட பேரிடர் நிர்வகிப்பு செயற்குழுஇன் (JPBD) சிறப்புக் கூட்டத்தின் மூலம் சேதத்தின் அளவை சிகாமாட் மாவட்ட அதிகாரி மதிப்பிட்டார்.
62 வீடுகள், இரு சுராவ் மற்றும் அரசாங்கத்தின் ஒன்பது வளாகங்கள் இதில் பாதிக்கப்பட்டிருப்பதாக JPBD வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெர்னாமா