மலாக்கா, மார்ச் 18 - கைப்பேசி தொடர்பான தகராறில் தனது நண்பரைக் கொலை செய்ததாக நம்பப்படும் ஆடவர் ஒருவர் மீது இன்று ஆயர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டது.
44 வயதான சைஃபுல் ஹாடி ஒத்மான், கடந்த மார்ச் 11-ஆம் தேதி, இரவு 7.58 மணி முதல் 8.15 மணிக்குள், சுங்கை ஊடாங்கில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான முஹமட் ஹனாஃபி யூசோப் என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றவியல் சட்டப்பிரிவு 302-இன் கீழ் அவர் மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப் பட்டால், மரண தண்டனை அல்லது குறைந்தபட்சம் 30 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். மரண தண்டனை விதிக்கப் படாத பட்சத்தில், குறைந்தது 12 பிரம்படியும் விதிக்கப்படலாம்.
மாஜிஸ்திரேட் ஷர்டா ஷியென்ஹா முகமட் சுலைமான் முன்னிலையில் குற்றப் பத்திரிகை வாசிக்கப் பட்டபோது, சைஃபுல் ஹாடி குற்றச் சாட்டைப் புரிந்து கொண்டதாகத் தலையசைத்தார். இருப்பினும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்பதால் அவரிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப் படவில்லை.
இவ்வழக்கில் அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஷாஸா நூர் ஷரிஃப் ஆஜரானார். குற்றஞ்சாட்டப் பட்டவர் வழக்கறிஞர் எவராலும் பிரதிநிதிக்கப் படவில்லை.
வழக்கை மீண்டும் செவிமடுப்பதற்காக ஏப்ரல் 29-ஆம் தேதியை நீதிமன்றம் நிர்ணயித்தது.
கைப்பேசி தகராறில் நண்பரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் ஆடவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
18 மார்ச் 2026, 6:45 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
உங்கள் கருத்து என்ன?





