ஷா ஆலம், நவ 4 — நேற்று இரவு 7.55 மணிக்கு ஜோகூரின் சிகாமாட் மாவட்டத்தில் உள்ள ஜெமென்தா பகுதியில் 2.7 ரிக்டர் அளவிலான வலுவற்ற நிலநடுக்கம் ஏற்பட்டது என மலேசிய வானிலைத் துறை (மெட்மலேசியா) தெரிவித்தது.
அந்த நிலநடுக்கத்தின் மையம் 2.5 டிகிரி மற்றும் கிழக்கு 102.8 டிகிரியில், செகாமட்டின் மேற்கே சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது.
“சிகாமாட் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டது,” என்று மெட்மலேசியா தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்தவர்கள், மெட்மலேசியாவின் கேள்வித்தாளை பூர்த்தி செய்ய https://forms.gle/1cWc2YD8DgWpbDJP7 கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.




