மலேசியாவில் ஜூன் மாதம் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

6 ஏப்ரல் 2026, 6:06 AM
மலேசியாவில் ஜூன் மாதம் வரை நீடிக்கும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

ஷா ஆலம், ஏப்ரல் 6 – நாட்டில் அண்மைக்காலமாக ஆங்காங்கே மழை பெய்து வந்த போதிலும், தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் ஜூன் மாதம் வரை தொடரும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

இது குறித்து மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் துணை இயக்குநர் (செயல்பாடு) அம்புன் திண்டாங் கூறுகையில், இப்போது பெய்து வரும் மழையானது பருவமழை மாற்றக் காலத்தினால் ஏற்படும் தற்காலிக நிகழ்வே தவிர, இது வெப்பநிலையைக் குறைக்கப் போதிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று விளக்கமளித்துள்ளார். குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் வடக்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் இந்த வெப்பத்தின் தாக்கம் குறிப்பிடத்தக்க அளவில் குறையாது என்று அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தப் பருவமழை மாற்றக் காலத்தின் போது மிகக் குறுகிய நேரத்தில் பெய்யும் பலத்த மழையினால் இடியுடன் கூடிய புயல், பலத்த காற்று மற்றும் திடீர் வெள்ளம் போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். குறிப்பாக நகர்ப்புறங்களில் இடி மின்னல் மற்றும் கனமழையினால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதற்கிடையில், வெப்பமான வானிலையினால் நீர்நிலைகளில் குறைந்து வரும் நீர்மட்டத்தைச் சீர்செய்யும் நோக்கில், இன்று முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை செயற்கை மழை பொழிய வைக்கும் நடவடிக்கை (Cloud Seeding) மேற்கொள்ளப்படவுள்ளது.

தீபகற்ப மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை உறுதிப்படுத்தவும், நீர் பிடிப்புப் பகுதிகளில் மழைப்பொழிவை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.