சுபாங் ஜெயா, ஏப்ரல் 5: ஸ்ரீ செர்டாங், பிளாட் ஈக்கான் சமூகத் தோட்டத்தில் உள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறையின் செயல்திறனை மேம்படுத்தி, குடியிருப்பாளர்களின் செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்க புத்ரா பல்கலைக்கழக (UPM) ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்களின் நிபுணத்துவம் உதவியுள்ளது.
நீர்ப்பாசனம் மற்றும் நீர் வளப் பொறியியல் துறையின் மூத்த விரிவுரையாளர் டாக்டர் முஹம்மது அடிப் முகமது நசீர் கூறுகையில், பெரிய அளவிலான மீன் குளம் கட்டப்படுவதற்கு முன்பு, சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாட்டைக் குறைக்க மழைநீர் சேகரிப்பு முறையை தனது குழுவினர் நிறுவியதாகக் கூறினார்.
பல ஆய்வுகளுக்குப் பிறகு, இந்த அமைப்பு மிகவும் பயனர் நட்புடன் கூடிய மறுசுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறையாக (RAS) மேம்படுத்தப்பட்டதாக டாக்டர் முஹம்மது அடிப் குறிப்பிட்டார்.
"கெளுத்தி மீன்களுக்கான சிறிய குளம் எளிதில் அசுத்தமடைந்து, பராமரிக்கக் கடினமாக இருந்தது. திலாப்பியா மீன்களுக்கான பெரிய குளத்தில் ஒவ்வொரு சுழற்சியிலும் 500 முதல் 600 மீன்கள் வரை இறந்தன. ஆனால், RAS முறையின் மூலம், மீன்களின் இறப்பு விகிதம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாக உள்ளது," என்று அவர் கூறினார்.
RAS அமைப்பு பிரதான தொட்டியில் உள்ள நீரை வடிகட்டி மறுசுழற்சி செய்கிறது. இது முதியவர்-கள் குளத்தை நிர்வகிப்பதை எளிதாக்குவதோடு, நீர்ப் பரிசோதனையின் தேவையையும் குறைக்கிறது.
கெளுத்தி மீன்களை விட சிவப்பு திலாப்பியா மீன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்துக் கருத்துரைத்த டாக்டர் முஹம்மது அடிப், அவை மிகவும் கடினமானவை, சுத்தமானவை மற்றும் சந்தையில் அதிக தேவையைக் கொண்டிருப்ப-தாகக் கூறினார்.
நீரின் தரத்தைக் கண்காணிக்க கால்நடை மருத்துவத் துறை மாணவர்களையும், குளத்தின் கட்டமைப்பை மேம்படுத்த பொறியியல் துறை மாணவர்களையும் UPM இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்த அமைப்பு குறைந்தபட்ச செலவில் நிலைத் தன்மையுடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்கொள்ளப் பட்டு, முன்னேற்ற அறிக்கைகள் சம்பந்தப்பட்ட துறையிடம் சமர்ப்பிக்கப்படுவதாக டாக்டர் முஹம்மட் அடிப் கூறினார்.
"நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு அதிக நீர் தேவைப் படுகிறது. வடிவமைப்பு சரியாக இல்லாவிட்டால், செலவு வருமானத்தை விட அதிகமாகி விடும். எனவே, மறுசுழற்சி செய்யப் பட்ட நீர் மற்றும் மழைநீரைப் பயன்படுத்துவது இந்த அமைப்பின் பராமரிப்புச் செலவு கிட்டத் தட்ட இலவசம் என்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்."
"இங்குள்ள சமூகம் இந்த ஆய்வுக்கு மிகுந்த ஆதரவளிக்கிறது. விளக்கப்படுவதை அவர்கள் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல், தங்கள் சொந்த அனுபவத்தின் அடிப்படையில் மேம்பாடுகளைச் செய்யக்கூடியவர்களாகவும் உள்ளனர்," என்றார்.
இந்த ஒத்துழைப்பு தொடரும் என்றும், எதிர் காலத்தில் இந்த அமைப்பு மேலும் மேம்படுத்தப் பட்டு, சமூகத்தால் எளிதாக நிர்வகிக்கப்படும் என்றும், ஸ்ரீ செர்டாங்கைச் சுற்றியுள்ள மற்ற நகர்ப்புற தோட்டங்களுக்கு இது ஒரு முன் மாதிரியாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஸ்ரீ செர்டாங், பிளாட் ஈக்கான் சமூகத் தோட்டத்தில் உள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்பு முறையின் செயல்திறனை மேம்படுத்தும் புத்ரா பல்கலைக்கழகம்
5 ஏப்ரல் 2026, 9:51 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
கிள்ளானில் ஜோப்கேர் வேலைவாய்ப்பு சந்தை: வேலை தேடுவோருக்கு அழைப்பு
Media Selangor Team
4 செப்டெம்பர் 2026

selangor
RS-2 ஏகமனதாக ஏற்பு : 2030 வரையிலான சிலாங்கூரின் பொருளாதார கொள்கையாக அமையும்
Norrasyidah Arshad
13 ஆகஸ்ட் 2026

selangor
ஆகஸ்ட் 30, காஜாங் அரங்கில் சிலாங்கூர் மாநில அளவிலான 2026 தேசிய தினக் கொண்டாட்டம்
Media Selangor Team
11 ஆகஸ்ட் 2026

selangor
RM500 பில்லியன் பொருளாதாரத்தைத் தாண்டிய முதல் மாநிலமாக சிலாங்கூர் திகழவிருக்கிறது
Media Selangor
11 ஆகஸ்ட் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



