சிரம்பான், ஏப்ரல் 4 – தாமான் மந்தின் பாருவில் உள்ள ஒரு மாடி வீட்டில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
32 வயதான அப்பெண் சம்பந்தப்பட்ட இந்தச் சம்பவம் குறித்த தகவல் இரவு 11.33 மணியளவில் கிடைத்ததாக நெகிரி செம்பிலான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.
"20x65 சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த மாடி வீடு முழுமையாக எரிந்து நாசமானது. பாதிக்கப்பட்டவரின் உடல் பிரதான படுக்கையறையில் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது," என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
தீயை அணைக்கும் பணியில் 14 அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டதாகவும், தீயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய பின்னர், இரவு 11.50 மணியளவில் முடிவுக்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், பக்கவாதம் மற்றும் பகுதி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த அப்பெண், சம்பவம் நடந்தபோது உறங்கிக் கொண்டிருந்ததாக நம்பப் படுகிறது என்றும், அச்சமயம் அவரது தம்பி வீட்டில் இல்லை என்றும் நீலாய் சட்டமன்ற உறுப்பினர் ஜே. அருள் குமார் கூறினார்.
பாதிக்கப்பட்ட பெண் தனது தம்பியுடன் மட்டுமே அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடந்தபோது, அவரது தம்பி உணவு வாங்குவதற்காக வெளியே சென்றிருந்தபோது, வீடு தீப்பற்றி எரிவதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.
"ஒரு பெண் உதவி கோரி அலறும் சத்தம் கேட்டதாகவும், ஆனால் தீ வேகமாகப் பரவி, வீட்டின் கதவு மூடப் பட்டிருந்ததால், பொதுமக்களால் உள்ளே சென்று அவரைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் பக்கத்து வீட்டுக்காரர் கூறியதாக அவர் தெரிவித்தார்."
சிரம்பான், மந்தினில் மாடி வீட்டு தீயில் சிக்கிய மாற்றுத்திறனாளிப் உடல் கருகி மரணம்
4 ஏப்ரல் 2026, 8:16 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
எல்பிடி2 நெடுஞ்சாலையில் 5 வாகனங்கள் மோதி விபத்து: இரு சிறுவர்கள் உட்பட நால்வர் காயம்
Shalini Rajamogun
27 மே 2026

national
கெப்போங்கில் ஐந்து வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆடவர் உடல் கருகி மரணம்
Pakiya
30 ஏப்ரல் 2026

national
மூழ்கியதாக அஞ்சப்படும் வெளிநாட்டு மாணவரைத் தேடும் பணி தொடர்கிறது - தீயணைப்புத் துறை
PAKIYA
17 பிப்ரவரி 2026

national
எல்லா மாநிலங்களிலும் வெள்ளம் வந்தாலும் போம்பா (தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை) தயார் நிலையில் உள்ளது
Pakiya
30 நவம்பர் 2025

உங்கள் கருத்து என்ன?



