கோலாலம்பூர் மார்ச் 4 , சிலாங்கூர், சபா மாநிலங்களில் குடும்ப பொழுதுபோக்கு மையம் (PHK) மற்றும் ஊடாடும் பொழுது போக்கு மையம் (PHI) உரிமங்களின் பெயரில் இயங்கி வந்த 13 சூதாட்ட மையங்களை குற்றப் புலனாய்வுத் துறை (JSJ) முற்றுகையிட்டது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, சிலாங்கூர் மற்றும் சபா குற்றப் புலனாய்வுத் துறையினருடன் இணைந்து 'ஓப்ஸ் டாத்தூ காஸ்' எனும் இந்த சிறப்பு நடவடிக்கையை இரண்டு நாட்களாக நடத்தியது.
சிலாங்கூரில் ஸ்ரீ கெம்பாங்கான் மற்றும் கிள்ளான் பகுதிகளில் எட்டு மையங்களிலும், சபாவில் கோத்தா கினபாலு, தாவாவ் மற்றும் சண்டாக்கான் பகுதிகளில் ஐந்து மையங்களி- லும் சூதாட்டம், விபச்சாரம் மற்றும் குண்டர் கும்பல் தடுப்புப் பிரிவு (D7) இந்தச் சோதனை-களை மேற்கொண்டதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ எம். குமார் கூறுகையில், இந்த மையங்கள் பொதுவாக குழந்தைகளுக்-கான சிமுலேட்டர் விளையாட்டுகளை வழங்கும் PHK உரிமங்களைக் காட்டி அதிகாரிகளை ஏமாற்ற முயன்றதாகத் தெரிவித்தார்.
“உண்மையில், இந்த மையங்களில் பந்துவீச்சு அல்லது குழந்தைகளுக்கான பிற செயல் பாடுகள் இருக்க வேண்டும். ஆனால், அதற்குப் பதிலாக சூதாட்ட நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கணினி உபகரணங்கள் அங்கு பொருத்தப் பட்டிருந்தன,” என்றார்.
"இந்த நடவடிக்கையில், சிலாங்கூரில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டினரைச் சேர்ந்த 52 மையப் பாதுகாவலர்களும் சூதாட்டக்காரர்களும் கைது செய்யப்பட்டனர், அதே நேரத்தில் சபாவில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்."
“கைது செய்யப்பட்ட அனைவரும் 20 முதல் 75 வயதுக்குட்பட்டவர்கள்,” என்று அவர் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
சோதனைகளின் போது கையடக்கக் கணினிகள் (tablets), கணினி உபகரணங்கள், சூதாட்ட இயந்திரங்கள் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவற்றையும் காவல்துறை பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.
இவ்வழக்கு 1953-ஆம் ஆண்டு பொது சூதாட்ட சட்டத்தின் பிரிவு 4B (a), 4(1)(c) மற்றும் 6(1) ஆகியவற்றின் கீழும், 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் பிரிவு 6(1)(c) மற்றும் 15(1)(c) ஆகியவற்றின் கீழும் விசாரிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சூதாட்ட நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க முயல வேண்டாம் என ஏற்பாட்டாளர்களுக்கும் சிண்டிகேட்டுகளுக்கும் கடுமையான எச்சரிக்கை விடுத்த எம். குமார், இந்த நடவடிக்கை தொடர்ச்சியாக மேற் கொள்ளப் படும் என்றும் உறுதிப்படுத்தினார்.
"ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அனைத்து குற்றப் புலனாய்வுத் துறை தலைவர்களுக்கும் சூதாட்ட நடவடிக்கைகள் முழுமையாக ஒழிக்கப்படுவதைக் கண்காணித்து உறுதி செய்யுமாறு நான் உத்தரவிட்டுள்ளேன்," என்று அவர் கூறினார்.
சிண்டிகேட்டுகள் இப்போது புதிய செயல்பாட்டு முறைகளைப் பயன்படுத்தி மீண்டும் செயல்பட முயற்சிக்கும் சாத்தியத்தையும் அவர் நிராகரிக்கவில்லை.
"தற்போதைய போக்கு, சிண்டிகேட்டுகள் சிமுலேட்டர்கள் மற்றும் பெரிய திரைகளைக் கொண்ட கணினிகள் போன்ற பெரிய அளவிலான சூதாட்ட இயந்திரங்களுக்கு மாறுவதைக் காட்டுகிறது."
"இந்த சூதாட்ட நடவடிக்கைகள் வீரர்களுக்கு நிச்சயமாக இழப்பை ஏற்படுத்தும், அது ஆயிரக்கணக்கான ரிங்கிட் முதல் மில்லியன் கணக்கான ரிங்கிட் வரை கூட இருக்கலாம் என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, சிலாங்கூர் மற்றும் சபா குற்றப் புலனாய்வுத் துறையினர் இணைந்து 'ஓப்ஸ் டாத்தூ காஸ்' சிறப்பு நடவடிக்கை
4 ஏப்ரல் 2026, 3:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
sukankini
புகைமூட்டதால் ஒத்திவைக்கப்பட்ட 4 பாரா சுக்மா போட்டிகள் கடும் பாதுகாப்புடன் மீண்டும் தொடங்கின
Media Selangor Team
7 செப்டெம்பர் 2026

selangor
தாமான் ஸ்ரீ மூடா வெள்ளத் தடுப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்
Media Selangor Team
3 செப்டெம்பர் 2026

selangor
RS-2 திட்டம்: கல்வி, வாழ்க்கைச் செலவின விவகாரங்களில் கூடுதல் கவனம் தேவை
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



