கோத்தா டாமன்சாரா, பிரிவு 7-ல் அனுமதியின்றி கட்டப்பட்ட இரண்டடுக்கு கொள்கலன் கட்டுமானத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர சபை (MBPJ) நேற்று இடித்துத் தள்ளியது.
கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் விடுக்கப்பட்ட உத்தரவுகளுக்குக் கட்டிட உரிமையாளர் இணங்கத் தவறியதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா மேயர், டத்தோ முகமட் ஸஹ்ரி சமிங்கோன் தெரிவித்தார்.
கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன் பல்வேறு அறிவிப்புகளும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
"கட்டிடத்தை இடித்து காலி செய்யுமாறு நோட்டீஸ், விசாரணை மற்றும் உத்தரவுகள் வழங்கப்பட்ட போதிலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிமையாளர் நடவடிக்கை எடுக்கத் தவறினார்," என்று கூறினார்.
"குடியிருப்பாளர்களின் பாதுகாப்பிற்காக சட்டத்தை அமல்படுத்துவதில் MBPJ சமரசம் செய்து கொள்ளாது," என அந்த அமலாக்க நடவடிக்கைக்குத் தலைமை தாங்கியபோது அவர் குறிப்பிட்டார்.
MBPJ-யின் பல்வேறு உள் துறைகள் மற்றும் மலேசிய அரச காவல்துறையின் (PDRM) ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது.
இந்நடவடிக்கையின் போது, கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் முஹம்மது இஸ்வான் அஹ்மட் காசிம், MBPJ மண்டலம் 3 மன்ற உறுப்பினர் முஹம்மது ஷஸ்வான் சுஹைமி மற்றும் MBPJ கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறை இயக்குநர் இஸ்மத்தினூன் அப்துல் ரஹ்மான் ஆகியோரும் உடனிருந்தனர்.
குடியிருப்பாளர்களின் நலனை உறுதி செய்வதோடு, பெட்டாலிங் ஜெயாவை பாதுகாப்பான, நீடித்த மற்றும் வளமான நகரமாகப் பராமரிக்க, அனுமதியின்றி கட்டப்படும் எந்தவொரு கட்டுமானத்தின் மீதும் MBPJ தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்று மாநகர சபை உறுதியளித்துள்ளது.
இரண்டடுக்கு கொள்கலன் கட்டுமானத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர சபை (MBPJ) இடித்துத் தள்ளியது
2 ஏப்ரல் 2026, 4:18 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களுக்கான வழிகாட்டிகள்: அரசியல் நோக்கமின்றி மறுஆய்வு செய்ய சிலாங்கூர் அரசு தயார்
Shalini Rajamogun
16 ஜூன் 2026

selangor
ஆறு வணிக வளாகங்களை அம்பாங் ஜெயா நகராட்சி மன்றம் (MPAJ) பறிமுதல் செய்தது
Pakiya
2 ஏப்ரல் 2026

selangor
கோலா லங்காட் நகராட்சி மன்றம், பந்திங்-கிள்ளான் சாலையில் சட்டவிரோத குப்பைகளை அகற்றும் நடவடிக்கை
Pakiya
1 ஏப்ரல் 2026

national
உடல், மன மற்றும் உணர்ச்சி நலனை கவனத்தில் கொண்டு சிலாங்கூர் புதிய பராமரிப்புத் தொகுதியை உருவாக்குகிறது
Pakiya
1 ஏப்ரல் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



