மாலை நாட்டில் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

29 மார்ச் 2026, 9:01 AM
மாலை நாட்டில் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 29 - சிலாங்கூர் மாநிலத்தின் உலு சிலாங்கூர் மற்றும் கோம்பாக் ஆகிய இரு மாவட்டங்களில் இன்று மாலை 6 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஆய்வு மையம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சிலாங்கூர் மட்டுமல்லாது கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளிலும் மோசமான வானிலை நிலவக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்ற நிலை கிழக்கு மலேசியாவின் சரவாக் மற்றும் சபா மாநிலங்களின் சில இடங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக, ஒரு மணிநேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைப்பொழிவு பதிவாகும் போதோ அல்லது கனமழை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடிக்கும் அறிகுறி தென்படும் போதோ இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

இந்த எச்சரிக்கையானது ஒரு முறை வெளியிடப்பட்டால் அதிகபட்சமாக ஆறு மணிநேரம் வரை மட்டுமே செல்லுபடியாகும் ஒரு குறுகிய கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பொதுமக்கள் மாலை நேரப் பயணங்களின் போது கூடுதல் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வானிலை மாற்றங்கள் குறித்து துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களைப் பெற மெட்மலேசியாவ்வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.met.gov.my என்ற முகவரியையோ அல்லது அதன் சமூக ஊடகப் பக்கங்களையோ நாடலாம். மேலும், 'myCuaca' செயலியைப் பதிவிறக்கம் செய்து வானிலை தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.