சுபாங் ஜெயா, மார்ச் 29: சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 387 மாணவர்கள், சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (எம்பிஐ) மூலம் மாநில அரசாங்கத்திடமிருந்து பள்ளி நிதியுதவியைப் பெற்றனர்.
இந்த உதவி, பள்ளிப் பருவம் தொடங்குவதற்கு முன்னர் பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைக் இலக்காகக் கொண்டு வழங்கப்பட்டதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் மிஷேல் இங் மெய் ஸ்ஸே தெரிவித்தார்.
தனியார் நிறுவனத்துடனான ஒத்துழைப்பின் விளைவாக, ஆரம்பத்தில் நிர்ணயிக்கப்பட்ட 300 மாணவர்கள் என்ற எண்ணிக்கையை விட இம்முறை அதிகமானோர் பயனடைந்ததாக அவர் குறிப்பிட்டார்.
"ஆரம்பத்தில் 300 மாணவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் 'யுனிவர்சல் தெரபியூடிக்' நிறுவனத்துடன் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக, அவர்கள் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மேலும் 87 மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்க ஒப்புக்கொண்டனர்," என்றார்.
"மொத்தம் RM38,700 மதிப்புள்ள இந்த பங்களிப்பு பெற்றோரின் சுமையைக் குறைக்கும் என்று நம்புகிறோம். இம்முறை, ரோஸ் அறக்கட்டளையின் ஆதரவுடன் இலவச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையையும் நாங்கள் ஏற்பாடு செய்திருப்பது ஒரு சிறப்பம்சமாகும்" என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
முன்னதாக, MBI அறக்கட்டளையின் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் ஒரு மில்லியன் மாணவர்களுக்குப் பள்ளி உபகரணங்கள் வாங்குவதற்கு உதவ ஏறக்குறைய RM20 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில் பின்தங்கிவிடக் கூடாது என்பதை உறுதி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
இந்த உதவியைப் பெற விரும்புவோர், அந்தந்த சட்டமன்ற சேவை மையங்களில் பெற்றோரின் அடையாள அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ் அல்லது மைக்கிட் போன்ற துணை ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும்.
இந்த உதவியைத் தவிர, எம்பிஐ அறக்கட்டளை சிலாங்கூர் மக்கள் பயிற்சித் திட்டம், மடிக்கணினி மற்றும் இணைய டேட்டா நன்கொடைகள் போன்ற பல்வேறு கல்வி முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், 'யுனிவர்சல் தெரபியூடிக்' நிறுவனத்தின் நிறுவனர் டத்தோ ஸ்ரீ சாமுவேல் சாய், குறைந்த வருமானம் பெறும் குழுவினருக்கு, குறிப்பாக கல்வித் துறையில் உதவுவது தங்கள் நிறுவனத்தின் முன்னுரிமை என்றார்.
"இந்த உதவித் திட்டத்தை வழங்குவதற்காக நாங்கள் சுபாங் ஜெயா சட்டமன்ற மக்கள் சேவை மையத்துடன் இணைந்து செயல்படுவது இது மூன்றாவது ஆண்டாகும். தேவையிலுள்ள மக்களுக்கு உதவ சேவை மையம் மேற்கொள்ளும் அனைத்துத் திட்டங்களுக்கும் நாங்கள் ஆதரவளிக்கிறோம்," என்று அவர் கூறினார்.
சுபாங் ஜெயா சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 387 மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது
29 மார்ச் 2026, 4:44 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
NutriSel திட்டம்: சுபாங் ஜெயாவில் 78 பள்ளிகளைச் சேர்ந்த 7,213 மாணவர்கள் பயன்
Media Selangor Team
28 செப்டெம்பர் 2026

selangor
MPAJ Kasih திட்டம்: 100 மாணவர்களுக்கு சத்தான காலை உணவு
Media Selangor Team
28 செப்டெம்பர் 2026

selangor
புகைமூட்டம்: மாணவர்களுக்கு மறுபயன்பாட்டு முகக்கவசங்கள் வழங்க மாநில அரசு பரிசீலனை
Sheeda Fathil
18 செப்டெம்பர் 2026

national
புகைமூட்டம்: சிலாங்கூரில் மாணவர்களுக்கு இலவச முகக்கவச விநியோகம்
Norrasyidah Arshad
16 செப்டெம்பர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



