ஷா ஆலம், மார்ச் 24: சமூக ஊடகங்களில் வைரலான, பெரிய அளவிலான பிளாஸ்டிக் கொள்கலன்களில் RON95 பெட்ரோல் நிரப்பப்பட்ட சம்பவம் குறித்து ஜோகூர் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஸ்கூடாயில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், ஒரே வாகனம் சம்பந்தப்பட்ட இரண்டு தனித்தனி பரிவர்த்தனைகள் நடந்திருப்பது கண்டறியப்பட்டதாக KPDN ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட ஆய்வின்படி, ஒருமுறை வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால், மற்றொரு முறையில் வாகனத்தின் பின்பகுதியில் (Boot) வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கொள்கலன்களில், மலேசிய விநியோகக் கட்டுப்பாட்டாளர் (Pengawal Bekalan Malaysia) அனுமதித்த அளவை விடக் கூடுதலான பெட்ரோல் நிரப்பப்பட்டுள்ளது."
இதனை உறுதிப்படுத்தும் நோக்கத்திற்காகச், சிசிடிவி மற்றும் பரிவர்த்தனைப் பதிவுகளை ஆய்வு செய்வதும் இந்த விசாரணையில் அடங்கும் என்று KPDN கூறியது.
"இது சம்பந்தமாக, விநியோகக் கட்டுப்பாட்டு ஒழுங்குமுறைகள் 1974-இன், துணை விதி 12A-இன் கீழ் ஒரு வழக்கு திறக்கப்பட்டுள்ளது. மேலும், விசாரணைக்கு உதவுவதற்காக வாகனத்தின் உரிமையாளர் கண்டறியப்பட்டு அழைக்கப்படுவார்," என்று தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், தனிநபர்களுக்கு RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். அதே வேளையில், நிறுவனங்களுக்கு RM2 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
பொதுமக்கள் 1-800-886-800 என்ற எண்ணின் மூலமாகவோ, 019-848 8000 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவோ அல்லது Ez ADU KPDN செயலி மூலமாகவோ KPDN-க்கு தகவல் அல்லது புகார்களை அளிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பிளாஸ்டிக் கொள்கலன்களில் RON95 பெட்ரோலை நிரப்பியது தொடர்பாக ஜோகூர் KPDN விசாரணை
24 மார்ச் 2026, 10:02 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
செப். 9 வரை பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Bernama
3 செப்டெம்பர் 2026

national
ஆகஸ்ட் 12 வரை எரிபொருள் விலையில் லிட்டருக்கு 5 சென் குறைப்பு
Shalini Rajamogun
6 ஆகஸ்ட் 2026

national
மேற்கு ஆசியப் பதற்றத்தால் மானியமில்லா பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு
Shalini Rajamogun
23 ஜூலை 2026

national
சிங்கப்பூர் வாகனத்தில் சட்டவிரோதமாக RON95 பெட்ரோல் நிரப்பிய ஓட்டுநருக்கு RM20,000 அபராதம்
Shalini Rajamogun
4 ஜூலை 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



