ஜாயிஸ் (JAIS) ஏற்பாடு செய்த 'ஒற்றுமை இப்தார்' நிகழ்வில் 1,400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

19 மார்ச் 2026, 3:21 AM
ஜாயிஸ் (JAIS) ஏற்பாடு செய்த 'ஒற்றுமை இப்தார்' நிகழ்வில் 1,400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

ஷா ஆலாம்: சிலாங்கூர் சமய இலாகா (ஜாயிஸ்) ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை கேஎல்ஐஏ, சுல்தான் அப்துல் சமாட் பள்ளிவாசலில் நடைபெற்ற இஃப்தார் இன்ஸ்பிராசி பெர்பாடுவான் பெர்டானா 2026 எனும் ஒற்றுமை நோன்புத் துறப்பு நிகழ்ச்சியில் 1,400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூரில் பல்வேறு சமூகத்தினரின் பங்களிப்பின் மூலம் சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜாயிஸ் தெரிவித்தது.

'அனைவருக்கும் கருணை' என்ற கருப்பொருளைக் கொண்ட இந்நிகழ்ச்சியில், இஸ்லாமிய அரசு சாரா அமைப்புகள் (PIBK), புதிய நம்பிக்கையாளர்கள் (முவாலாஃப்), மாற்றுத்திறனாளிகள் (OKU) மற்றும் இஸ்லாமியர் அல்லாதோர் எனப் பலரும் ஒன்றிணைந்தனர்.

"ஜாயிஸின் டக்வா பிரிவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, சிலாங்கூர் இஸ்லாமிய சமய மன்றம் (மாயிஸ்), சிலாங்கூர் MACMA மற்றும் மலேசிய விமான நிலைய ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் பொறியியல் கழகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது," என்று ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கலாச்சாரங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மற்றும் இப்தார் மேசையில் உரையாடல்கள் மூலம் புரிந்துணர்வை வலுப்படுத்தும் பகிர்வு அமர்வுகளுடன் இந் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து குர்ஆன் ஓதும் நிகழ்வும், ஒரு சிறிய சொற்பொழிவும் இடம்பெற்றதாக ஜாயிஸ் கூறியது.

இஸ்லாத்தை ரஹ்மத்தான் லில் ‘ஆலமீன் (அனைவருக்கும் கருணை) என வெளிப்படுத்துவதையும், இஸ்லாம் மீதான தவறான புரிதல்களைக் குறைப்பதையும் இந்த ஏற்பாடு நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனம் மேலும் தெரிவித்தது.

"இந்நிகழ்ச்சியின் மூலம், ஒற்றுமைக்கான விதைகள் தொடர்ந்து விதைக்கப்பட்டு, சிலாங்கூரின் எதிர்காலம் அதன் அனைத்து மக்களுக்கும் இணக்கமாகவும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது," என்று அது கூறியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.