தெஹ்ரான்: அமெரிக்க-இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப் பட்ட உயர் பாதுகாப்பு அதிகாரி அலி லரிஜானி மற்றும் பாசிஜ் படையின் தலைவர் கோலாம்ரெசா சொலைமானி ஆகியோரின் இறுதிச் சடங்கு புதன்கிழமை தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்றதாக ஈரான் அரசு ஊடகத்தை மேற்கோள்காட்டி அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரஸ் டிவி-யின் படி, இந்த இறுதிச் சடங்கில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு இரு தலைவர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்தினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் லரிஜானி கொல்லப்பட்டதாகவும், அவருடன் அவரது மகன் மோர்டெசா, உதவியாளர் அலிெரசா பயாத், பல கவுன்சில் ஊழியர்கள் மற்றும் மெய்க்காப்பாளர்கள் ஆகியோரும் உயிரிழந்துள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நாளில் நடந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் சொலைமானி உயிரிழந்ததை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புக் கழகம் உறுதிப்படுத்தியது.
கடந்த மாத இறுதியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா-இஸ்ரேல் போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட மிக உயர்ந்த அதிகாரிகளில் லரிஜானி மற்றும் சொலைமானியும் அடங்குவர்.
பிப்ரவரி 28 முதல் ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல்களில், உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி உட்பட இதுவரை சுமார் 1,300 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல், ஜோர்டான், ஈராக் மற்றும் அமெரிக்க இராணுவத் தளங்களைக் கொண்ட வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இதனால், காயங்கள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்கள் ஏற்பட்டதுடன், உலகளாவிய சந்தைகள் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
-- பெர்னாமா
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர் லாரிஜானி மற்றும் பாசிஜ் படைத் தளபதிக்கு இறுதி அஞ்சலி
19 மார்ச் 2026, 3:10 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
antarabangsa
ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல்களை தற்காலிகமாக ஒத்திவைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒப்புதல் - டொனால்ட் டிரம்ப்
Shalini Rajamogun
2 ஆகஸ்ட் 2026

antarabangsa
ஜோர்டானில் ஈரான் வான்வழி தாக்குதல்: 2 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர்
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
ஈரானில் அமெரிக்க தாக்குதல்: 116 தொலைத்தொடர்பு கோபுரங்கள் முடக்கம், இணையம் & தொலைபேசி சேவைகள் பாதிப்பு
Shalini Rajamogun
19 ஜூலை 2026

antarabangsa
ஈரான் தாக்குதலால் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
Shalini Rajamogun
18 ஜூலை 2026

வகைantarabangsa
உங்கள் கருத்து என்ன?

