அமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்படும் : ஈரான்

20 செப்டெம்பர் 2026, 11:05 AM
அமெரிக்கா வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை ஹார்முஸ் நீரிணை மூடப்படும் : ஈரான்

இஸ்தான்புல், செப் 20 - ஜூன் உடன்பாட்டில் முன் வைத்த தனது வாக்குறுதிகளை அமெரிக்கா நிறைவேற்றும் வரை , ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென, ஈரானிய நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்தார்.

ஈரான் தனது நிபந்தனைகளை எதிர்தரப்பிடம் மத்தியஸ்தர்கள் மூலம் தெளிவாக கூறி விட்டது என மொஹம்மட் பகெர் கலிபாவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக, அந்நாட்டு தேசிய ஊடகம் தகவல் வெளியிட்டிருந்தது.

" ஈரான் தேசத்தின் அனைத்து நியாயமான உரிமைகள் அங்கீகரிக்கப்படும் வரையிலும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையிலும், தொடக்க பேச்சுவார்த்தைக்கான நிலைக்கு மீண்டும் திரும்பப் போவதில்லை ; ஹார்முஸ் நீரிணையும் திறக்கப் போவதில்லை " என அவர் கூறினார்.

கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை நடத்தின. அதற்குப் பதிலடியாக தெஹ்ரான் அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் உள்ள அண்டை நாடுகளைத் தாக்கத் தொடங்கியது. அதற்கடுத்து மேற்காசியாவில் பதற்றம் மேலோங்கியது.

எண்ணெய் , எரிவாயு கப்பல்கள் பயணிக்கும் உலகின் மிக முக்கியமான நீர்வழிப் பாதையான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.

ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக கடந்த ஜூனில் வாஷிங்டனும் தெஹ்ரானும் இணக்கம் கண்டன. எனினும், ஹர்முஸ் நீரிணையின் பாதுகாப்பு, பயண அம்சங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவ , அந்த உடன்பாடு முறிந்தது.

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.