கோலாலம்பூர், மார்ச் 17 - சுபாங் ஜெயா, சிலாங்கூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஸ்கைலிஃப்ட் இயந்திரத்திலிருந்து தவறி விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
சுபாங் ஜெயா மாவட்ட காவல் துறைத் தலைவர், ஏசிபி வான் அஸ்லான் வான் மாமாட் கூறுகையில், பிற்பகல் 3.50 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இச்சம்பவம் குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகவும், யுஎஸ்ஜே 8 காவல் நிலையக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, பாதிக்கப்பட்ட மூவரும் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் நுழைவாயிலில் கிடந்ததைக் கண்டதாகத் தெரிவித்தார்.
அவர்களில் இருவர் தலை மற்றும் உடலில் ஏற்பட்ட பலத்த காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மற்றொருவர் தலை மற்றும் மார்பில் காயமடைந்த நிலையில், செர்டாங், சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
38 முதல் 46 வயதுக்குட்பட்ட மூன்று வெளிநாட்டினர், கனமழை பெய்து கொண்டிருந்தபோது, ஸ்கைலிஃப்ட் இயந்திரத்தைப் பயன்படுத்தி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
சம்பவ இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் இதுவரை குற்றச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும் கிடைக்கவில்லை என்றும், இந்த வழக்கு திடீர் மரண அறிக்கையாக வகைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் வான் அஸ்லான் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சுல்தான் இட்ரிஸ் ஷா மருத்து வமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள், சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் (IPD) கட்டுப்பாட்டு மையத்தை 03-78627222 / 03-78627100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு அல்லது விசாரணைக்கு உதவ அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சுபாங் ஜெயாவில் ஸ்கைலிஃப்ட்டில் இருந்து விழுந்து இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்
17 மார்ச் 2026, 7:46 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சுபாங் ஜெயாவில் 200-க்கும் மேற்பட்ட விவேக வாகன நிறுத்தமிட CCTV கேமராக்கள் பொருத்தம்
Dewi Abdul Rahman
19 ஆகஸ்ட் 2026

selangor
சுபாங் உத்தாமா தேசிய இடைநிலைப் பள்ளிக்கு RM10,000 நிதியுதவி வழங்கப்பட்டது- சட்டமன்ற உறுப்பினர்
Shalini Rajamogun
3 ஆகஸ்ட் 2026

selangor
சுபாங் ஜெயாவில் டிங்கி சம்பவங்கள் 2,533 ஆக அதிகரிப்பு; தடுப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன
Shalini Rajamogun
23 ஜூலை 2026

selangor
சுபாங் ஜெயாவில் 150 முதியவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்கப்பட்டது
Shalini Rajamogun
16 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



