சிலாங்கூர் அரசாங்க தரவுப் பரிமாற்றத் தளம் (SelGDX), சிங்கப்பூரில்  2026-ஆம் ஆண்டுக்கான புத்தாக்க விழாவின் அங்கீகார விருதைப் பெற்றுள்ளது  

12 மார்ச் 2026, 7:16 AM

ஷா ஆலாம், மார்ச் 12: சிலாங்கூர் மாநில அரசுச் செயலாளர் அலுவலகத்தின் தகவல் நிர்வாகப் பிரிவின் (BPM) கீழ் இயங்கும் சிலாங்கூர் அரசாங்க தரவுப் பரிமாற்றத் தளம் (SelGDX), சிங்கப்பூரில் உள்ள சேண்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற கவின்சைடர் ஏஷியா பசிபிக் ஏற்பாட்டில், 2026-ஆம் ஆண்டுக்கான புத்தாக்க விழாவின் விருது வழங்கும் நிகழ்வில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெற்ற இவ்விழா, அனைத்துலக அளவில் பொதுத் துறையின் இலக்கவியல் உருமாற்றத்தின் சிறப்பைக் கொண்டாடும் நோக்கில், உலகெங்கிலுமிருந்து பொதுத் துறையைச் சேர்ந்த தொழில் துறைத் தலைவர்கள், அரசு நிறுவனங்களின் கொள்கை வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஒன்றிணைத்தது.

இந் நிகழ்ச்சியில், மாநில அரசின் துணைச் செயலாளர் (நிர்வாகம்) டத்தோ முகமது யாசிட் சைரி, தனிநபர் விருதுகள் பிரிவின் கீழ் 'ஆண்டின் சிறந்த இலக்கவியல் தலைவர்' விருதைப் பெற்றார்.

அதே வேளையில், SelGDX குழு, முழு அரசாங்க (WOG) விருதுப் பிரிவின் கீழ் 'ஆண்டின் சிறந்த இலக்கவியல் நிறுவனம்' விருதைப் பெற்றது.

இந்த இரு விருதுகளையும் கவின்சைடர் ஏஷியா பசிபிக் இயக்குநர் டைலர் லிம் வழங்கினார்.

SelGDX தளத்தின் மூலம், பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு இடையே தரவுகளைப் பகிர்ந்து கொள்ளும் தளத்தைக் கொண்ட மலேசியாவின் முதல் மாநிலமாக சிலாங்கூர் உருவெடுத்துள்ளது. இது மாநிலத்தின் அறிவார்ந்த இலக்கவியல் உள்கட்டமைப்பின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்துகிறது.

உலகளாவிய அளவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், பொதுத் துறையின் இலக்கவியல் உருமாற்றத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தகுதியையும் நம்பகத் தன்மையையும் உயர்த்துகிறது.

மேலும், இந்த வெற்றி, பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் ஊக்கியாக செயல்படும் திறன் கொண்ட தரவுப் பகிர்வு முயற்சிகளை உருவாக்குவதில் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.