ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை

10 மார்ச் 2026, 4:27 AM
ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை

ஷா ஆலம், மார்ச் 10: மலேசிய கல்வி அமைச்சகம் (KPM) வெளியிட்ட கல்வி நாட்காட்டியின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 19 (வியாழக்கிழமை) முதல் ஐடில்ஃபித்ரி கொண்டாட்டத்தை முன்னிட்டு கூடுதல் விடுமுறை அளிக்கப்படுகிறது.

நடப்பு கல்வி காலண்டரின் அடிப்படையில், இந்த ஆண்டு ஈகைத் திருநாள் மார்ச் 21-ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெடா, கிளந்தான் மற்றும் திரங்கானு ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய பிரிவு A பள்ளிகளுக்கு மார்ச் 19-ஆம் தேதி வியாழக்கிழமை ஒரு நாள் மட்டும் கூடுதல் விடுமுறை வழங்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மார்ச் 20 முதல் மார்ச் 28 வரை அவர்களுக்கு ஒன்பது நாட்கள் முதல் தவணைக்கான பள்ளி விடுமுறை தொடங்குகிறது.

இதற்கிடையில், சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர், பினாங்கு, பேராக் உள்ளிட்ட மற்ற அனைத்து மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்களை உள்ளடக்கிய பிரிவு B பள்ளிகளுக்கு மார்ச் 19 மற்றும் 20 ஆகிய இரண்டு நாட்களுக்குக் கூடுதல் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இம்மாநிலங்களில் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 21-ஆம் தேதி முதல் மார்ச் 29-ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் முதல் தவணை விடுமுறை அமலுக்கு வரும்.

ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பள்ளிப் பணியாளர்கள் பெருநாளுக்கு முன் ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்யவும், சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகத் திரும்பவும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.