புத்ராஜெயா பாதையில் எம்.ஆர்.டி சேவை வழக்கம்போல் மீண்டும் தொடங்கியது

9 மார்ச் 2026, 8:20 AM
புத்ராஜெயா பாதையில் எம்.ஆர்.டி சேவை வழக்கம்போல் மீண்டும் தொடங்கியது

கோலாலம்பூர், மார்ச் 9 — மின் விநியோகப் பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து புத்ராஜெயா பாதையில் எம்.ஆர்.டி சேவைகள் இன்று காலை வழக்கமான நிலைக்குத் திரும்பியதாக ரேபிட் ரெயில் சென்டர் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.

இந்தப் பிரச்சனையின் போது வழங்கப்பட்ட மாற்று ரயில் சேவைகள் மற்றும் இலவச ஷட்டில் பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

டமன்சாரா டமாய் நிலையம் அருகே மின் கேபிள் திருட்டு சம்பவம் காரணமாக சேவை இடையூறு ஏற்பட்டது. இதனால் புத்ராஜெயா பாதையில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன.

“பாதிக்கப்பட்ட நிலையங்களில் கிட்டத்தட்ட 180 கூடுதல் ஊழியர்களை ரேபிட் ரெயில் நியமித்ததுடன், இடையூறு காலம் முழுவதும் 20 இலவச ஷட்டில் பேருந்துகளையும் வழங்கியது.

“இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக ரேபிட் ரெயில் காவல்துறைக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது,” என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைக் கண்டால் 03-78852585 என்ற எண்ணில் ரேபிட் கேஎல் வாடிக்கையாளர் சேவையையோ அல்லது அருகிலுள்ள அதிகாரிகளையோ தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.