மாநிலங்களுக்கான மானியத்தை 10.5 பில்லியன் ரிங்கிட்டாக மத்திய அரசு உயர்த்துகிறது

6 மார்ச் 2026, 2:14 AM
மாநிலங்களுக்கான மானியத்தை 10.5 பில்லியன் ரிங்கிட்டாக மத்திய அரசு உயர்த்துகிறது

புத்ராஜெயா, மார்ச் 6-மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பை ஆதரிக்கும் நோக்கில், மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் மானியத்தை இந்த ஆண்டு 10.5 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க தேசிய நிதிக் மன்றம் (MKewN) ஒப்புக்கொண்டுள்ளதாக நிதி அமைச்சு (MOF) தெரிவித்துள்ளது.

2025-ஆம் ஆண்டில் இந்த மானியம் 10.3 பில்லியன் ரிங்கிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக, கூட்டுப் பட்டியல் மானியம், மாநில சாலைப் பராமரிப்பு மானியம் மற்றும் சுற்றுலா வரிப் பங்கீடு ஆகியவற்றின் கீழ் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் மானியங்களை மேம்படுத்தவும் தேசிய நிதிக் மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.

மடாணி அரசாங்கத்தின் கீழ் மத்திய அரசின் மானியம் 2022-இல் 8.1 பில்லியன் ரிங்கிட்டிலிருந்து கடந்த ஆண்டு 10.3 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது என்று நிதி அமைச்சு மேலும் தெரிவித்தது.

"மடாணி அரசாங்கம் கோடிட்டுக் காட்டியுள்ளபடி, 2026-ஆம் ஆண்டு முதல் மக்கள் தொகை அடிப்படையிலான மானிய விகிதங்களின் (PMBO) அதிகரிப்பைத் தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் பணப்புழக்கத்தின் நிலைத்தன்மையை அதிகரிக்க, கூட்டுப் பட்டியலின் கீழ் நிதி வழங்கும் முறையை மேம்படுத்தவும் தேசிய நிதிக் மன்றம் ஒப்புக்கொண்டுள்ளது," என்று நிதி அமைச்சு கூறியது.

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மாநிலம் அல்லது பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்து மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசின் மானியத்தை மேம்படுத்துவதில் மடாணி அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று கூறினார்.

"மடாணி பொருளாதாரக் கட்டமைப்பில் கூறப்பட்டுள்ளபடி, நாட்டின் வருமானம் சமமாகவும் நல்லாட்சியின் அடிப்படையிலும் பகிரப்பட வேண்டும்," என்று அவர் அதே அறிக்கையில் குறிப்பிட்டார்.

அரசியல் நிலைப்பாட்டைக் கருத்தில் கொள்ளாமல், அனைத்து மாநில அரசுகளுடனும் நெருக்கமாகப் பணியாற்ற மடாணி அரசாங்கம் எப்போதும் தயாராக உள்ளது என்றும் அவர் கூறினார்.

"சமூகப் பொருளாதார மேம்பாடு மற்றும் முக்கிய உள்கட்டமைப்பைத் தீவிரப்படுத்த இந்த மானிய மேம்பாடு அவசியமாகும், இதன் மூலம் நாம் ஒரு நாடாக அனைவரும் சமமாக உயர்ந்து நிற்க முடியும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.