2025ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் பொது தேர்வின் முடிவு மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு 

9 மார்ச் 2026, 4:13 AM
2025ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் பொது தேர்வின் முடிவு மார்ச் 31ஆம் தேதி வெளியிடப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு 

கோலாலம்பூர், மார்ச் 9 - மலேசியக் கல்வி அமைச்சு (KPM) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வச் செய்தியின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டிற்கான எஸ்.பி.எம் (SPM) தேர்வு முடிவுகள் வரும் மார்ச் 31-ஆம் தேதி அன்று வெளியிடப்படவுள்ளன.

நாடெங்கிலும் உள்ள 3,350 தேர்வு மையங்களில் இத்தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த மொத்தம் 413,299 மாணவர்கள் அன்றைய தினம் தங்களின் முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

பள்ளி மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை அந்தந்தப் பள்ளிகளில் காலை 10 மணி முதல் நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதிய மாணவர்கள் (Calon Persendirian), தாங்கள் பதிவு செய்த மாநிலக் கல்வி இலாகாவைத் தொடர்பு கொண்டு தங்களின் தேர்வு முடிவுகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேர்வு முடிவுகளை மாணவர்களிடம் வழங்கும் செயல்முறை மிகவும் திறமையாகவும் முறையாகவும் நடைபெறுவதை அந்தந்தப் பள்ளி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும் என அமைச்சு நினைவுறுத்தியுள்ளது.

இணையம் வழியாக முடிவுகளை அறிய விரும்பும் மாணவர்கள், மார்ச் 31 காலை 10 மணி முதல் ஏப்ரல் 6 மாலை 6 மணி வரை myresultspm.moe.gov.my என்ற அகப்பக்கத்தை நாடலாம்.

குறுஞ்செய்தி (SMS) வழியாகவும் மாணவர்கள் தங்களின் முடிவுகளைப் பெற முடியும்; அதற்கு SPM <இடைவெளி> அடையாள அட்டை எண் <இடைவெளி> தேர்வு எண் எனத் தட்டச்சு செய்து 15888 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

நவீனத் தொழில்நுட்பம் மற்றும் நேரடி விநியோகம் என இரண்டு முறைகளிலும் மாணவர்கள் தங்களின் கடின உழைப்பிற்கான பலனை உரிய நேரத்தில் பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்வி அமைச்சு துரிதப்படுத்தியுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.