சுக்மா போட்டி 2026: தன்னார்வலர் பதிவுக்கான ஆதரவு சிறப்பாக உள்ளது

9 மார்ச் 2026, 1:57 AM
சுக்மா போட்டி 2026: தன்னார்வலர் பதிவுக்கான ஆதரவு சிறப்பாக உள்ளது

ஷா ஆலம், மார்ச் 9 – எதிர்வரவிருக்கும் சுக்மா போட்டி 2026க்கான தன்னார்வலர் பதிவுக்குக் கிடைத்த ஆதரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக உள்ளது.

தற்போது பதிவுகள் ஆரம்ப கணிப்புகளை விட ஆறு மடங்கு அதிகமாக உள்ளன என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இதுவரை மாநிலம் 30,000 பதிவுகளைப் பெற்றுள்ளது. முன்னதாக சுமார் 5,000 தன்னார்வலர்களை மட்டுமே இலக்காக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆதரவு குறிப்பாக இளைஞர்களிடையே வலுவான உற்சாகத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் கூறினார்.

“நாங்கள் ஆரம்பத்தில் 5,000 தன்னார்வலர்களை எதிர்பார்த்தோம். ஆனால் இப்போது 30,000 பதிவுகள் கிடைத்துள்ளன. பெரும்பாலான இளைஞர்கள் தன்னார்வத் தொண்டு செய்ய ஆர்வமாக உள்ளனர்,” என்று அமிருடின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமோக வரவேற்பைப் பெற்றதில் அமிருடின் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். முடிந்தவரை அதிகமான தன்னார்வலர்களுக்கு இடமளிக்க அரசு முயற்சி செய்வதோடு, நிகழ்வு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு திறமையாக நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

தன்னார்வலர்களுக்கான பயிற்சி மே மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் தயார்நிலை மற்றும் தளவாட ஏற்பாடுகள் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூரில் 22வது சுக்மா போட்டி நடைபெறவுள்ளது. இது ஆகஸ்ட் 15 முதல் 24, 2026 வரை நடைபெறும். தொடக்க விழா சிப்பாங் சர்வதேச சுற்றில் (SIC) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரா சுக்மா போட்டிகள் செப்டம்பர் 5 முதல் 10, 2026 வரை நடைபெறும்.

சுக்மா தயார்நிலை குறித்த புதுப்பிப்புகளைப் பற்றி கேட்டபோது, சுமார் RM40 மில்லியன் செலவில் பணிகள் சீராக நடைபெற்று வருவதாக அமிருடின் தெரிவித்தார்.

“சுக்மாவுக்குச் சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பாக, ஜூன் மாதத்திற்குள் தயார்நிலை பணிகளை முடிக்க நாங்கள் இலக்கு வைத்துள்ளோம். எனவே, அனைத்து வசதிகளும் சரியான நேரத்தில் தயாராக இருக்கும்,” என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.