ஆல் இங்கிலாந்து பூப்பந்து அரையிறுதியில் பெர்லி தான்-தீனா முரளிதரன் தோல்வி

8 மார்ச் 2026, 2:47 AM
ஆல் இங்கிலாந்து பூப்பந்து அரையிறுதியில் பெர்லி தான்-தீனா முரளிதரன் தோல்வி

கோலாலம்பூர்: சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து பூப்பந்து போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில், தேசிய மகளிர் இரட்டையர் வீராங்கனைகளான பெர்லி தான்-எம்.தீனா, தென்கொரியாவின் பேக் ஹா நா-லீ சோ ஹீ இணையிடம் தோல்வியுற்றனர்.

உலகின் இரண்டாம் நிலை ஆட்டக்காரர்களான பெர்லி-தீனா, 17-21, 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவினர். பர்மிங்காம் யுடிலிட்டி அரங்கில் இந்த ஆட்டம் சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.முதல் செட்டை பெர்லி-தீனா 2-0 என முன்னிலையுடன் சிறப்பாகத் தொடங்கினர். இருப்பினும், உலகின் நான்காம் நிலை ஆட்டக்காரர்களான ஹா நா-சோ ஹீ இணை மீண்டும் எழுச்சி பெற்று, முதல் செட்டை 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினர்.

இரண்டாவது செட்டிலும் பெர்லி-தீனா ஆக்ரோஷமாக விளையாடி 10-7 என முன்னிலை பெற்றனர். ஆனால், தென்கொரிய இணை மீண்டும் சிறப்பாக விளையாடி 21-18 என அந்த செட்டையும் வென்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

2022-ஆம் ஆண்டிலிருந்து ஹா நா-சோ ஹீ இணைக்கு எதிராக மோதிய ஏழு ஆட்டங்களில் பெர்லி-தீனாவின் நான்காவது தோல்வி இது. இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் நம்பிக்கை தொடர்கிறது. ஆரோன் சியா-சோ வூ யிக் இணை அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் சென் போ யாங்-லியு யி இணையைச் சந்திக்கவுள்ளது.

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.