கோலாலம்பூர், மார்ச் 3 - ஆல் இங்கிலாந்து 2026 பூப்பந்து போட்டியில் மேலும் முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நாட்டின் இரண்டு கலப்பு இரட்டையர் ஜோடிகளின் கனவு, பர்மிங்காம் உட்டிலிட்டா அரங்கில் இன்று நடைபெற்ற முதல் சுற்றிலேயே தோல்வியுற்று வெளியேறியதால் தகர்ந்தது.
மலேசியாவின் சவாலைத் தொடங்கிய சுயேச்சை ஜோடியான ஜிம்மி வோங் - லாய் பெய் ஜிங், தைவானின் யே ஹோங் வெய் - நிக்கோல் கோன்சாலஸ் சான் ஜோடியிடம் 36 நிமிடப் போராட்டத்தில் 17-21, 18-21 என்ற நேர் செட்களில் தோல்வியுற்றனர்.
2025 ஜப்பான் மாஸ்டர்ஸ் போட்டிக்குப் பிறகு, இதே ஜோடியிடம் ஜிம்மி - பெய் ஜிங் தழுவும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.
இதேபோல், மற்றொரு தேசிய கலப்பு இரட்டையர் ஜோடியான ஹூ பாங் ரோன் - செங் சு யின், இந்திய ஜோடியான துருவ் கபிலா - தனிஷா க்ராஸ்டோவிடம் தங்களது மூன்றாவது மோதலில் இரண்டாவது முறையாகத் தோல்வியைத் தழுவினர்.
41 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில், உலகின் 23ஆம் நிலை ஜோடியான பாங் ரோன் - சு யின் சிறப்பாகத் தொடங்கினாலும், நிலைத்தன்மையை இழந்து இறுதியில் 17-21, 19-21 எனத் தோல்வியடைந்தனர்.
இதற்கிடையே, மலேசிய நேரப்படி நாளை அதிகாலை தங்கள் முதல் சுற்றுப் போட்டிகளைத் தொடங்கவிருக்கும் நான்கு மலேசியப் பிரதிநிதிகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியுள்ளது. நாட்டின் முக்கிய கலப்பு இரட்டையர் ஜோடியான சென் டாங் ஜி - டோ ஈ வெய்; ஆண்கள் இரட்டையர் பிரிவில் சூங் ஹொன் ஜியான் - முஹம்மது ஹைக்கல் நஸ்ரி மற்றும் ஓங் யூ சின் - தியோ ஈ யி; ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லியோங் ஜுன் ஹாவ் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
ஆல் இங்கிலாந்து 2026 போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
-- பெர்னாமா
ஆல் இங்கிலாந்து 2026: நாட்டின் இரண்டு கலப்பு இரட்டையர் ஜோடிகள் தொடக்கத்திலேயே வெளியேற்றம்
4 மார்ச் 2026, 2:53 AM
தொடர்புடைய செய்திகள்
sukankini
ஆல் இங்கிலாந்து இறுதிப் போட்டிக்கு ஆரன்-வூய் யிக் இணை முன்னேற்றம்
Pakiya
8 மார்ச் 2026

sukankini
ஆல் இங்கிலாந்து பூப்பந்து அரையிறுதியில் பெர்லி தான்-தீனா முரளிதரன் தோல்வி
Pakiya
8 மார்ச் 2026

sukankini
தாமஸ் கோப்பை போட்டியில் நாட்டின் சவாலை வலுப்படுத்தும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது தௌஃபிக் ஜொஹாரி நம்பிக்கை தெரிவித்தார்
Pakiya
26 பிப்ரவரி 2026

sukankini
ஆல் இங்கிலாந்து பூப்பந்து தொடரில் தென் கொரிய இணையிடம் ஆரோன் சியா - சோ வூய் யிக் தோல்வி
Evelyn Moses
9 மார்ச் 2026

உங்கள் கருத்து என்ன?




