கோலாலம்பூர், மார்ச் 6 - ரஹ்மா அடிப்படைப் பங்களிப்பு (சாரா) திட்டத்தின் கீழ் ஈரப் பொருட்களின் வகைகளை விரிவுபடுத்துவதற்கு முன், அரசாங்கம் இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யவும், இறுதி முடிவு எடுப்பதற்கு முன் நுகர்வோருக்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்த விரிவான ஆய்வு அவசியம் என்று அமைச்சு கூறியது.
"தற்போதுள்ள சாரா திட்டத்தை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான பரிந்துரைகளையும் உள்ளீடுகளையும் அரசாங்கம் வரவேற்கிறது."
"பிப்ரவரி 9, 2024 முதல், உறைந்த உணவுகளை (frozen foods) ஒரு புதிய வகையாகச் சேர்த்து, சாரா பொருட்களின் வகைகளை அரசாங்கம் விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம், முன்பு 14 ஆக இருந்த பொருட்களின் வகைகள் இப்போது 15 ஆக உயர்ந்துள்ளன,” என்று அமைச்சு இன்று மேலவையின் எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டது.
முன்பு 100,000 ஆக இருந்த வாங்கக்கூடிய பொருட்களின் எண்ணிக்கையை 140,000 ஆகவும் அரசாங்கம் அதிகரித்துள்ளது.
கோழி, இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்ற ஈரப் பொருட்களைச் சாரா உதவித் திட்டத்தில் சேர்ப்பது குறித்து செனட்டர் டத்தோ அஹ்மட் இப்ராஹிம் எழுப்பிய கேள்விக்கு நிதி அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
-- பெர்னாமா
சாரா திட்டத்தில் ஈரப் பொருட்களின் வகைகளை விரிவுபடுத்த அரசாங்கம் ஆய்வு
6 மார்ச் 2026, 8:46 AM
தொடர்புடைய செய்திகள்
national
மாதாந்திர ரஹ்மா அடிப்படை உதவித்தொகை இன்று வரவு வைக்கப்பட்டது
Evelyn Moses
2 மார்ச் 2026

national
சலுகை விலையில் பொருட்கள்: 20 லட்சம் மலேசியர்கள் ரஹ்மா (SARA) உதவியைப் பெற்று பயன்
Mavitthran
13 பிப்ரவரி 2026

national
சாரா உதவித் தொகை பொருட்களில் உறைந்த உணவை உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது: பிரதமர் அன்வார்
Mavitthran
10 பிப்ரவரி 2026

national
இன்று மலேசியர்கள் சாரா RM100 நிதி உதவியைப் பெறுவார்கள்
Shalini Rajamogun
9 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?




