கோலாலம்பூர், மார்ச் 05 - எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள், 60 வயதை அடையும் சுமார் 60 விழுக்காட்டு ஊழியர் சேமநிதி வாரிய உறுப்பினர்கள், அடிப்படை சேமிப்பாக RM390,000 கொண்டிருக்கும் திறனைக் கொண்டுள்ளனர்.
கடந்தாண்டு ஆண்டின் இறுதிக்குள், 18-இல் இருந்து 55 வயதிற்குட்பட்ட மலேசியர்களில், 31 மில்லியன் அல்லது 41.2 விழுக்காட்டு ஊழியர் சேமநிதி வாரிய உறுப்பினர்கள் இந்த அடிப்படை சேமிப்பு நிலையை அடைந்துவிட்டதாக, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
இதற்கிடையில், ஓய்வு பெறும்போது போதுமான சேமிப்பு அளவை எட்டாத, 44.2 மில்லியன் அல்லது 58.8 விழுக்காட்டினர் இன்னும் இருப்பதாக மேலவையில் கேள்வி பதில் நேரத்தின்போது அவர் குறிப்பிட்டார்.
போதுமான ஓய்வூதிய வருமானம் என்ற அளவுகோலை அறிமுகப்படுத்துவதன் மூலம், முன்கூட்டியே பணம் எடுப்பதால் ஏற்படும் அடிப்படை சேமிப்பு குறைப்பைக் கட்டுப்படுத்த முடிவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா








