கடந்தாண்டுக்கான ஊழியர் சேமநிதி வாரியத்தின் இலாப ஈவு 6.3 முதல் 6.5% வரை அறிவிக்கப்படலாம்

22 பிப்ரவரி 2026, 8:10 AM
கடந்தாண்டுக்கான ஊழியர் சேமநிதி வாரியத்தின் இலாப ஈவு 6.3 முதல் 6.5% வரை அறிவிக்கப்படலாம்

கோலாலம்பூர், பிப் 22: கடந்தாண்டுக்கான இலாப ஈவாக 6.3 முதல் 6.5 விழுக்காடு வரை ஊழியர் சேமநிதி வாரியம் வழங்கும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடந்தாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் EPF-ன் முதலீட்டு வருமானம் 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. உலக பங்குச் சந்தை மீட்சியும் திறமையான சொத்து ஒதுக்கீடும் இதற்குக் காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் சேமிப்பாளர்கள் அதிக பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மாத இறுதிக்குள் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் EPF அதன் இலாப ஈவை அறிவிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.