செராஸ் ஜெயா இடைநிலைப்பள்ளியில் கூரை பழுதுபார்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்

5 மார்ச் 2026, 6:34 AM
செராஸ் ஜெயா இடைநிலைப்பள்ளியில் கூரை பழுதுபார்ப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 5 – செராஸ் ஜெயா இடைநிலைப்பள்ளியில் உள்ள டி பிளாக்கின் மேல் தளத்தில் கூரை பழுதுபார்ப்பு பணிகள் இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்தார்.

பொதுப்பணித் துறையின் (ஜே.கே.ஆர்) கட்டமைப்பு தடயவியல் ஆய்வில், மரக் கூரை இடிந்து விழும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, ஜூன் 2024 முதல் மேல் தளம் மூடப்பட்டுள்ளதாக ஃபட்லினா கூறினார்.

“டி பிளாக்கின் முழு கூரை அமைப்பையும் இடித்து மீண்டும் கட்டமைக்க ஜே.கே.ஆர் பரிந்துரைத்துள்ளது. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக மேல் தளத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து மூட வேண்டும்,” என்றும் அவர் எழுத்துப்பூர்வ நாடாளுமன்ற பதிலில் தெரிவித்தார்.

பழுதுபார்ப்பு பணிகளுக்கான காலக்கெடு மற்றும் வகுப்பறை பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான இடைக்கால நடவடிக்கைகள் குறித்து பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சியாரெட்ஸான் ஜோஹான் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைகள் தொடர்வதை உறுதி செய்வதற்காகப், படிவம் மூன்று மாணவர்கள் 180 பேர் தற்காலிகமாக ஐந்து வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பட்டறைகளுக்கு மாற்றப்பட்டதாக ஃபட்லினா விளக்கினார்.

பழுதுபார்ப்பு பணிகளுக்காக RM1.7 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 30 அன்று இந்தத் திட்டம் ஜே.கே.ஆர்-யிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பள்ளி சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பழுதுபார்ப்பு பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறுவதை உறுதிசெய்ய ஜே.கே.ஆர் உடன் அமைச்சகம் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றி, பணிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும் என்றும் அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.