அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 787 ஆக உயர்வு -- ஈரானிய செம்பிறைச் சங்கம்

4 மார்ச் 2026, 8:04 AM
அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 787 ஆக உயர்வு -- ஈரானிய செம்பிறைச் சங்கம்

அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் பலி எண்ணிக்கை 787 ஆக உயர்வு -- ஈரானிய செம்பிறைச் சங்கம்

இஸ்தான்புல், மார்ச் 3 (பெர்னாமா-அனடோலு) -- ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 787 ஆக அதிகரித்துள்ளதாக ஈரானிய செம்பிறைச் சங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

குண்டுவீசித் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக, அரசுக்குச் சொந்தமான தஸ்னிம் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டிய அந்த அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களின் எண்ணிக்கை குறித்த எந்த தகவலும் வழங்கப்படவில்லை.

கடந்த சனிக்கிழமை முதல், அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகப் பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடர்ந்து வருகின்றன. இந்தத் தாக்குதல்களில், உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமெனி மற்றும் மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட பல முக்கிய ஈரானியத் தலைவர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப் படுகிறது.

இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தளங்களைக் கொண்டுள்ள வளைகுடா நாடுகளைக் குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.

-- பெர்னாமா-அனடோலு

#Iran #USIsraelAttack #SeranganIran #TimurTengah #IranConflict #WorldNews

original news link : https://bernama.com/bm/dunia/news.php?id=2530038

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.