புத்ராஜெயாவில் ஆயிரக்கணக்கானோர் சந்திர கிரகணத்தைக் கண்டு களித்தனர்  

4 மார்ச் 2026, 4:34 AM
புத்ராஜெயாவில் ஆயிரக்கணக்கானோர் சந்திர கிரகணத்தைக் கண்டு களித்தனர்   

புத்ராஜெயா, மார்ச் 4- புத்ராஜெயா புத்ரா மசூதியில் இரவு 7.23 மணிக்குத் தொடங்கிய சந்திர கிரகணம் நிகழ்வை சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

இறைவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் உணர்த்தும் இந்த வானியல் நிகழ்வு, முஸ்லிம்களின் இறையச்சத்தையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் ஒரு நினைவூட்டலாகும் என்று இமாம் டாக்டர் முகமது ஜகுவா ரோட்சாலி தெரிவித்தார்.

இந்த அபூர்வ நிகழ்வைத் தொலைக்காட்சியில் காண்பதை விட, நேரடியாகத் தனது கண்களால் பார்த்தது மிகுந்த உற்சாகத்தை அளிப்பதாக முகம்மது ஐடில் இசுடின் என்ற இளைஞர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

சந்திர கிரகணத்தை முன்னிட்டு, புத்ரா மசூதி, தேசிய மசூதி மற்றும் துங்கு மிசான் ஜைனல் அபிடின் மசூதி ஆகியவற்றில் சிறப்புத் தொழுகைகளும் போதனைகளும் முறையாக நடைபெற்றன.

மறைந்திருக்கும் பாடங்கள் மற்றும் ஞானங்களை உணர்த்தும் வகையில் இந்த கிரகணச் சிறப்புத் தொழுகைகள் மற்றும் சுருக்கமான உரைகள் அமைந்திருந்தன.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.