சமூக ஊடகங்களில் பதிவிடும் முன் சிந்திப்பீர்; மலேசியர்களுக்குக் காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுரை

3 மார்ச் 2026, 4:01 AM
சமூக ஊடகங்களில் பதிவிடும் முன் சிந்திப்பீர்; மலேசியர்களுக்குக் காவல்துறை தலைமை இயக்குநர் அறிவுரை

கோலாலம்பூர், மார்ச் 3 — சமூக ஊடகங்களில் சமயம் மற்றும் இனம் சார்ந்த உணர்ச்சிகரமான விவகாரங்கள் குறித்து கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்குமாறும், மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் அரச மலேசிய போலீஸ்படை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. தேசிய நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் தூண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், மலேசியர்கள் முதிர்ச்சியுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் காலித் இஸ்மாயில் தெரிவித்தார்.

 தேவையற்ற தவறான புரிதல்களைத் தவிர்க்க, எவ்வித அறிக்கைகளையும் வெளியிடும் முன் அதிகாரப்பூர்வ ஆவணங்களையும் உண்மையான ஆதாரங்களையும் சரிபார்க்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாகப் பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், நாட்டில் நிலவும் அமைதியான சூழல் தொடர வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

நேற்று  காவல்துறை பயிற்சி மையத்தில் (PULAPOL), உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கலந்து கொண்ட நோன்புத் திறப்பு நிகழ்விற்குப் பிறகு அவர் இதனைத் தெரிவித்தார். அண்மையில் 'Threads' தளத்தில் திருக்குர்ஆனை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்ட பொதுப் பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் செயல் குறித்து சமூக ஊடகங்களில் எழுந்துள்ள விமர்சனங்கள் குறித்து அவர் கருத்துரைத்தார். அந்த மாணவர் இன்று குவாந்தான்  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவார் என்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

 இந்த வழக்கை ஆய்வு செய்த தலைமை வழக்கறிஞர், போதிய ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்த பின், சந்தேக நபர் மீது குற்றஞ்சாட்ட அனுமதி வழங்கியதாக அவர் கூறினார். தற்போது போலீஸ் காவலில் உள்ள அந்த மாணவர், தடுப்புக்காவல் காலத்தில் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி, சமூக ஊடகங்களில் இஸ்லாத்தை இழிவுபடுத்தியதாகக் கூறப்படும் புகாரின் பேரில், மலேசியா பகாங் அல்-சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழக (UMPSA) மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் 62 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.