தாயாரின் கழுத்தில் கத்தியால் குத்திய பெண் கைது

21 பிப்ரவரி 2026, 5:22 AM
தாயாரின் கழுத்தில் கத்தியால் குத்திய பெண் கைது

கோல பில்லா, பிப்ரவரி 21: இங்குள்ள ஜோஹோலில் உள்ள கம்போங் செகினே இனாஸில் நேற்று இரவு தனது தாயின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக குற்றம் சாட்டப் பட்ட 50 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோலா பிலா மாவட்ட காவல் துறை தலைமை கண்காணிப்பாளர் முகமது முஸ்தபா ஹுசின் கூறுகையில், ஆரம்ப விசாரணையில் சந்தேக நபர் ஒரு கூர்மையான ஆயுதத்தை பயன் படுத்தியதாக நம்பப்படுகிறது, அதாவது ஒரு கேன் திறப்பான்  என்றார்.

 

கிராமத்தில் ஒரு வீட்டில் நடந்த சண்டை குறித்து இரவு 7:08 மணிக்கு பொதுமக்களிடமிருந்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. "80 வயதுக்கு உட்பட்ட பாதிக்கப் பட்டவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், பதிக்கப் பட்டவர் நிலையில் மோசமில்லை, இன்னும் மருத்துவமனையின் கண்காணிப்பில் உள்ளார்" என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம், ஆனால் சம்பவத்திற்கான நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 326 இன் கீழ் வழக்கு விசாரிக்கப் பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ள பொதுமக்கள் கோலா பிலா மாவட்ட காவல் தலைமையகத்தை 06-4842.999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.