கோலாலம்பூர், பிப் 6 - சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 14, 15, 21, 22ஆம் தேதிகளில் கனரக மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சாலையைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சாலைப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
சாலை விபத்துக்களைக் குறைப்பதோடு, விழாக் காலத்தில் போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஏடி பட்லி தெரிவித்தார்.
இந்தத் தடையானது, கனரக லாரிகள், டிரெய்லர்கள், கொள்கலன் லாரிகள், கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்துறை பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் என பல வகைகளை உள்ளடக்கியது.
இதற்கிடையில், பொதுமக்களை தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு போக்குவரத்து விதிகளுக்குக் கீழ்ப்படியுமாறு போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.


