முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீட் காலமானார்

19 பிப்ரவரி 2026, 8:35 AM
முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீட் காலமானார்

கோலாலம்பூர், பிப் 19: இன்று பிற்பகல், முன்னாள் தலைமை நீதிபதி துன் அப்துல் ஹமீட் முகமட் தனது 83-வது வயதில் HUKM மருத்துவமனையில் காலமானார். அவரது மகன் முர்னி அப்துல் ஹமீட் இதனை உறுதிப்படுத்தினார்.

தனது தந்தை பிப்ரவரி 9 ஆம் தேதி HUKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், முதுமை காரணமாக உயிரிழந்ததாகவும் முர்னி கூறினார். புத்ராஜெயா, பிரிசின்க் 20-இல் உள்ள இஸ்லாமிய கல்லறையில் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

அப்துல் ஹமீட் டிசம்பர் 2007 முதல் அக்டோபர் 2008 வரை தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

அதுமட்டுமில்லாமல், மே 1, 1990இல் நீதித்துறை ஆணையராகவும், 1992இல் உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், செப்டம்பர் 1, 2000இல் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், ஆகஸ்ட் 1, 2003இல் கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதியாகவும் அவர் நியமிக்கப்பட்டார்.

-- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.