ஜப்பானில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்து - மூவரின் உடல்கள் கண்டுபிடிப்பு

19 பிப்ரவரி 2026, 4:53 AM
ஜப்பானில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்து - மூவரின் உடல்கள் கண்டுபிடிப்பு

தோக்யோ, பிப் 19 - கடந்த ஜனவரி மாதம் ஜப்பானின் குமாமோட்டோ (Kumamoto) மாகாணத்தில் உள்ள மவுண்ட் அசோவின் எரிமலை பள்ளத்தில் விபத்திற்குள்ளான சுற்றுலா ஹெலிகாப்டரில் பயணித்த மூன்று நபர்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தற்போது, அவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டு வருவதாகக் கியோட்டோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டர் சவாரிகளை வழங்கும் அசோ நகரில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலை மற்றும் நீர்ப் பூங்காவான கட்லி டொமினியனிலிருந்து ஜனவரி 20-ஆம் தேதி காலை ஹெலிகாப்டர் புறப்பட்டபோது அந்த விபத்து ஏற்பட்டது என நம்பப்படுகிறது.

அச்சம்பவத்தின்போது, தைவானைச் சேர்ந்த இரண்டு சுற்றுலா பயணிகள் மற்றும் 64 வயதான ஜப்பானிய விமானியும் அந்த ஹெலிகாப்டரில் இருந்தனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.