இனி சாலைப் போக்குவரத்து துறை அலுவலகங்களில் செயல்பாட்டு நேரங்களில் வரம்பற்ற வரிசை எண்களைப் பெறலாம்

19 பிப்ரவரி 2026, 2:35 AM
இனி சாலைப் போக்குவரத்து துறை அலுவலகங்களில் செயல்பாட்டு நேரங்களில் வரம்பற்ற வரிசை எண்களைப் பெறலாம்

கோலாலம்பூர், பிப் 19 - ஜனவரி 13 முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சாலைப் போக்குவரத்து துறை அலுவலகங்களிலும் செயல்பாட்டு நேரங்களில் வரம்பற்ற வரிசை எண்களைப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு வரிசை எண்கள் குறைவாக வழங்கப்பட்டதால், பலர் சேவைகளைப் பெற முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த சிரமத்தை கருத்தில் கொண்டு ஜேபிஜே இம்மாற்றத்தை நடைமுறைப்படுத்தியது என தலைமை இயக்குநர் டத்தோ ஏடி ஃபாட்லி ராம்லி தெரிவித்தார்.

இந்த மாற்றம் சேவை சீராகவும், நெரிசல் குறைவாகவும் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

முன்பு குறைந்த எண்ணிக்கையில் வரிசை எண்கள் வழங்கப்பட்டதன் காரணம், சேவை முகப்புகள் சீக்கிரமே மூடப்பட்டதால் அல்ல; மாறாக தினசரி வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டதால்தான் என அவர் விளக்கினார்.

இப்போது அலுவலக நேரம் முழுவதும் வரிசை எண் வழங்கப்படுவதால், பொது மக்கள் தங்கள் நேரத்திற்கு ஏற்ப சேவைகளைப் பெறலாம். இந்த நடவடிக்கை மக்களின் வசதியை முன்னிலைப்படுத்தி, சேவை தரத்தை உயர்த்தும் முயற்சியாகும் என ஏடி ஃபாட்லி விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.