புக்கிட் புருந்துங்கில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் மரணம்

17 பிப்ரவரி 2026, 6:54 AM
புக்கிட் புருந்துங்கில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் மரணம்

புக்கிட் புருந்துங்கில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் மரணம் கோலாலம்பூரை நோக்கிய புக்கிட் பெருந்துங் அருகே, வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் 443.2 கிலோமீட்டரில் இன்று காலை மூன்று வாகனங்கள் சம்பந்தப் பட்ட விபத்தில் பெண் பயணி ஒருவர் மரணமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து காலை 7.33 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமட் முக்லிஸ் முக்தார் கூறினார்.

"சுண்ணாம்பு ஏற்றிச் சென்ற 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஓட்டிவந்த டிரெய்லர் லோரி இந்த விபத்தில் சிக்கியது.

லோரி ஓட்டுநரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அதே வேளையில், ஹோண்டா சிட்டி காரை ஓட்டி வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆடவருக்கு இலேசான காயம் ஏற்பட்டது." "இந்த விபத்தில் ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 50 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிஎம்டபிள்யூ காரை ஓட்டி வந்த 30 வயது மதிக்கத்தக்க மற்றொரு ஆடவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் மேலதிக நடவடிக்கை மற்றும் சிகிச்சைக்காக சுகாதார அமைச்சகத்திடம் (KKM) ஒப்படைக்கப் பட்டதாக அவர் மேலும் கூறினார். ரவாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் (BBP) சேர்ந்த 14 வீரர்கள், தீயணைப்பு மீட்பு டெண்டர் (FRT), விரைவு மீட்பு வாகனம் (RRV) மற்றும் காம்பாக்ட் ஃபயர் ரெஸ்க்யூ டெண்டர் (CFRT) ஆகிய மூன்று வாகனங்களின் உதவியுடன் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.