கோலா லங்காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலமாகக் கண்டெடுப்பு; இருவர் கைது

17 பிப்ரவரி 2026, 4:03 AM
கோலா லங்காட்டில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண் சடலமாகக் கண்டெடுப்பு; இருவர் கைது

ஷா ஆலாம், பிப். 16 – இங்குள்ள வாழைத் தோட்டம் ஒன்றில் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இந்தோனேசியப் பிரஜைகள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை மணி 11.07 அளவில் பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர், சுப்பிரிண்டெண்- டன்ட் முஹம்மட் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.

"தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் குழுவினர் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். சோதனையின் போது, இந்தோனேசியப் பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது கழுத்தில் நெரிக்கப் பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததால், இதில் குற்றச் செயல் நிகழ்ந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது," என்று அவர் ஓர் அறிக்கையில் கூறினார்.

மேல் விசாரணை மற்றும் புலனாய்வில், தோட்டக்காரர்களாகப் பணிபுரியும் இரண்டு இந்தோனேசியப் பிரஜைகள் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கொலைக் குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்கு உதவுவதற்காக அவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.