பூடி95 திட்டத்தின் கீழ் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்

12 பிப்ரவரி 2026, 8:43 AM
பூடி95 திட்டத்தின் கீழ் 14 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்

கோலாலம்பூர், பிப். 12 – இவ்வாண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வரை, பூடி மடாணி RON95 (BUDI95) திட்டத்தின் கீழ் 14.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் RON95 பெட்ரோலை மானிய விலையில் பெறுகிறார்கள் என்று இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமிர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் தினசரி சராசரியாக 3.1 மில்லியன் பரிவர்த்தனைகள் எந்த சிக்கலும் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

“BUDI95 மூலம் மக்கள் RON95 பெட்ரோலை லிட்டருக்கு RM1.99 என்ற விலையில், நேரடியாக எரிபொருள் நிலையங்களில் சிக்கலான நடைமுறைகள் இல்லாமல் பெறுகிறார்கள். மானிய இலக்கு நிர்ணயத்தில் தகுதி சரிபார்ப்பதற்காக அடையாள அட்டை பயன்படுத்தப்படுகிறது, அது பயனுள்ளதும் நடைமுறைக்கு ஏற்றதுமானதுமாக நிரூபிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் தெரிவித்தார்.

PH-தெப்ராவ் தொகுதியைச் சேர்ந்த ஜிம்மி புவா வீ சே முன்வைத்த கூடுதல் கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். அந்த கேள்வி, BUDI95 போன்ற வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிதி சீர்திருத்தங்கள் மற்றும் அதே முறையை சமையல் எண்ணெய், சர்க்கரை போன்ற பிற பொருட்களுக்கும் விரிவுபடுத்த அரசின் திட்டங்கள் குறித்ததாக இருந்தது.

அதே நேரத்தில், குடியுரிமை அடிப்படையிலான அடையாளச் சரிபார்ப்பு முறையால் குடியுரிமையற்றவர்களிடம் மானிய கசிவு குறைக்க உதவுகிறது என்றும் அமிர் ஹம்சா தெரிவித்தார்.

எதிர்காலத்தில், சமையல் எண்ணெய் விலை நிலைத்தன்மைத் திட்டம் (COSS) தொடர்பாக அடையாள அட்டை பயன்பாட்டை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் (KPDN) ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், அடையாள அட்டை அடிப்படையிலான தற்போதைய சூழலமைப்பைப் விரிவுப்படுத்துவதற்கான கூடுதல் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.