ஷா ஆலாம், பிப் 11- நாட்டில் தற்போது அரசியல் பேசுப்பொருளாக உள்ள சட்டவிரோத ஆலயங்கள் குறித்த விவகாரத்தை அரசாங்கம் அமைதியான முறையில் கையாள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் கேட்டுக்கொண்டார்.
மேலும், சிலாங்கூர் மாநிலத்தில் சட்டவிரோத ஆலயங்கள் குறித்த சர்ச்சை வெடித்துள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரின் நிலைப்பாடு குறித்து தாம் முழு ஆதரவு தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வழிப்பாட்டு தலங்களையும் தனித்தனியாகவும் நியாயமான முறையில் மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், பழம்பெரும் வழிப்பாட்டு தலங்களுக்கு கூட்டரசு அரசாங்கம் ஒழுங்குப்படுத்தும் திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று மாண்புமிகு பிரகாஷ் சம்புநாதன் தனது எதிர்ப்பார்ப்பினை முன் வைத்தார்.


