ரமலான் மாதம் முழுவதும் மாநில அரசு பணியாளர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் அமல்

11 பிப்ரவரி 2026, 2:58 AM
ரமலான் மாதம் முழுவதும் மாநில அரசு பணியாளர்களுக்கு நெகிழ்வான வேலை நேரம் அமல்

கோல சிலாங்கூர், பிப் 11 - ரமலான் மாதம் முழுவதும், சிலாங்கூர் மாநில அரசுப் பணியாளர்களுக்கு நெகிழ்வான வேலை நேரத்தை அமல்படுத்த அனுமதிக்கும். இது ஒவ்வொரு துறையின் செயல்பாட்டு தேவைகளைப் பொறுத்ததாக இருக்கும்.

சில துறைகள் ஊழியர்கள் விரைவாக வீடு திரும்பும் வகையில் வேலை அட்டவணைகளை அமல்படுத்தலாம். எனினும், முக்கியமான சேவைகள் வழக்கமான வேலை நேரத்திலேயே தொடர்ந்து செயல்படும் என மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இதுகுறித்த ஏற்பாடுகள் முறையாகவும், சேவை வழங்கலில் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையிலும் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆலோசனைகளுக்குப் பிறகு முடிவு இறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

“தற்போதைய சூழ்நிலையையும் நிலவரத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்வோம். குறிப்பாக, விண்ணப்பங்கள் இருந்தால் அவற்றையும் பரிசீலிப்போம்.

“துறைத் தலைவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வேலை ஏற்பாடுகளை மறுசீரமைக்க முடியும் என நான் நம்புகிறேன்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். எதிர்வரும் வியாழக்கிழமை (19 பிப்ரவரி) ரமலான் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு, சிலாங்கூர் அரசு ஊழியர்கள் ஒன்பது மணி நேர வேலை நேரத்தை அடிப்படையில், ரமலான் மாதத்தில் மாலை 4 மணி முதல் மாலை 5.30 மணிக்குள் 30 நிமிடங்கள் முன்பாக வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.