கோலாலம்பூர், பிப். 11 - நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணனை சந்தித்தார். கடந்த டிசம்பர் மாதம், அமைச்சராகப் பதவி ஏற்ற பின்னர் ரமணன் மாமன்னரைச் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மனிதவள அமைச்சின் (KESUMA) வருங்காலத் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாமன்னருக்கு விரிவாக விளக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் (Facebook) பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தற்போது மனிதவள அமைச்சராகப் பதவியேற்றுள்ள டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், இதற்கு முன்பு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை துணையமைச்சராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


