ஷா ஆலம், பிப் 9: 2018ஆம் ஆண்டு முதல் தனது வாகன உரிமம் (LKM) மற்றும் காப்பீட்டைப் புதுப்பிக்காமல் இருந்த பெண் வியாபாரி ஒருவரை ஜேபிஜே அதிகாரிகள் தடுத்து வைத்தனர்.
(Bentley Continental) பென்ட்லி கான்டினென்டல் ரக வாகனத்தை ஓட்டி வந்த அந்த பெண் கோல, ஜாலான் துன் ரசாக்கில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கைகளில் தடுத்து வைக்கப்பட்டதாகக் கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) இயக்குநர் ஹமிடி ஆடம் தெரிவித்தார்.
அந்த வாகனம் தனக்குச் சொந்தமானது என்றும், காலாவதியான வாகன உரிமம், காப்பீடு மற்றும் ஓட்டுநர் உரிமம் (CDL) இல்லாத குற்றத்தைச் செய்ததாகவும் அவர் ஒப்புகொண்டார்.
“விசாரணையில் சொகுசு வாகனத்திற்கான LKM மற்றும் காப்பீடு 2018 முதல் புதுப்பிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
“கார் சம்பந்தப்பட்ட விஷயங்கள் முன்னர் குடும்பத்தினர் கவனித்தனர். அதனால், வாகன உரிமம் புதுப்பிக்கவில்லை என்பதை தான் உணரவில்லை என அப்பெண் கூறினார்,” என்று அவர் தெரிவித்தார்.
பின்னர், வாகனம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் மேல் நடவடிக்கைக்காகப் பறிமுதல் செய்யப்பட்டது.


