ஷா ஆலம், பிப் 9 - உலு சிலாங்கூரில் உள்ள செரெண்டா பொதுச் சந்தையில் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் மீன் விற்பனை செய்த மியான்மர் நாட்டவர் நேற்று உலு சிலாங்கூர் நகராண்மை கழகத்தால் (எம்பிஎச்எஸ்) மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.
அந்த வெளிநாட்டவர் நகராண்மை கழகத்தின் 2007ஆம் ஆண்டு வியாபாரிகள் (Hawkers) துணைச் சட்டத்தின் கீழ் உள்ள UUK 3 விதியை மீறியதாக எம்பிஎச்எஸ் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து, அந்த வியாபாரியின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சாலையோர வர்த்தகம் ஒழுங்காகவும் சட்டப்பூர்வமாகவும் மேற்கொள்ளப்படுவதை உறுதிசெய்ய வழக்கமான அமலாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்துவதாக எம்பிஎச்எஸ் கூறியது.
பொதுமக்களின் புகார்களைத் தொடர்ந்து ஜனவரி மாதம் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு எதிராக அமலாக்க நடவடிக்கைகளை கோல லங்காட் நகராண்மை கழகம் மேற்கொண்டது. நடவடிக்கையின் போது, நான்கு வெளிநாட்டினரின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதற்கிடையில், வெளிநாட்டு வியாபாரிகளின் செயல்பாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சனையை நிவர்த்தி செய்ய கண்காணிப்பை தீவிரப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியது.


