கோலாலம்பூர், பிப் 9 - இன்று மலேசியாவில் உள்ள 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களுக்கும் சாரா (SARA) RM100 நிதி உதவி வழங்கப்படுகிறது. மாடணி அரசு வழங்கும் இந்த உதவியின் மூலம் 22 மில்லியனுக்கும் அதிகமான குடிமக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
கடந்தாண்டு தொடங்கிய இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமாக இது அமைகிறது. அடையாள அட்டை மூலம் வழங்கப்படும் இந்த RM100 நிதியுதவியைப் பல்வேறு அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் பயன்படுத்தலாம். இதற்கிடையில், பயனாளர்கள் தங்களின் மீதமுள்ள இருப்பை sara.gov.my இணையதளம் மூலம் சரிபார்க்கலாம்.
மேலும், சாரா RM100 கிரெடிட்டை பயன்படுத்தக்கூடிய கடைகளின் பட்டியல் மற்றும் இந்த திட்டத்தின் கீழ் உள்ள பொருட்களின் விவரங்கள் ஆகியவற்றை அதிகாரப்பூர்வ சாரா இணையதளத்தில் சரிபார்க்கலாம்.


