வேலை இழந்தவர்களுக்குச் சொக்சோ வழங்கும் அனுகூலங்கள்

5 பிப்ரவரி 2026, 9:10 AM
வேலை இழந்தவர்களுக்குச் சொக்சோ வழங்கும் அனுகூலங்கள்

கோலாலம்பூர், பிப் 5 - ஜனவரி 1, 2018 அன்று தொடங்கப்பட்ட வேலைவாய்ப்பு காப்பீடு (LINDUNG KERJAYA) திட்டம், வேலை இழந்த காப்பீட்டாளர்களுக்கு (Insured Persons – IP) வருமான மாற்ற உதவியை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், பெர்கேசோவுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு சேவை அதிகாரிகள் (Employment Services Officers – ESO) மூலம் மீண்டும் வேலை பெறுவதற்கான உதவி வழங்கப்படுகிறது.

வேலை தேடும் முயற்சியின் ஒரு பகுதியாகக், காப்பீட்டாளர்கள் MYFutureJobs இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்கள் தகுதி வாய்ந்த அதிக வேலை வாய்ப்புகளை பெற முடியும் மற்றும் வேலைக்கான தேடல் செயல்முறை எளிதாகும்.

தகுதியான காப்பீட்டாளர்கள் வேலை இழந்த காலத்தில் அல்லது மீண்டும் வேலைப்பெற்ற பின்னர் திறன் பயிற்சிகளில் (skills training) பங்கேற்கலாம். இது EIS செயல்பாட்டு தொழிலாளர் சந்தை திட்டத்தின் (active labour market program) ஒரு பகுதியாகும். இதன் மூலம் அவர்களின் வேலை திறன்களை மேம்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.

காப்பீட்டாளர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் நன்மைகள் பெற முடியும். முதலில், வேலை இழந்த (LOE) நாளிலிருந்து 60 நாட்களுக்குள் இந்த உதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும், மாதாந்திர பங்களிப்புகளைக் குறைந்தது ஒரு குறிப்பிட்ட மாதங்கள் வரை செலுத்தியிருக்க வேண்டும் (Contributions Qualifying Conditions – CQC), மற்றும் EIS சட்டப்படி வேலை இழப்பு ஏற்பட்டியிருக்க வேண்டும்.

வேலை தேடல் உதவித்தொகை (Job Search Allowance – JSA) என்பது, தனது முக்கிய வருமான ஆதாரத்தை இழந்தவர்களுக்கு வழங்கப்படும் மாற்று வருமான உதவியாகும். இந்த உதவித்தொகை, வேலை இழந்தவர்களின் அடிப்படை செலவுகளை ஈடு செய்யும் நோக்கத்தில் வழங்கப்படுகிறது.

தகுதியான பெறுநர்கள், 3 முதல் 6 மாதங்கள் வரை வேலை தேடல் உதவித்தொகையைப் பெறுவார்கள். உதவித்தொகை வழங்கப்படும் கால அளவு, பெறுநரின் பங்களிப்பு தகுதி நிபந்தனைகள் (Contributions Qualifying Conditions – CQC) அடிப்படையில் நிர்ணயிக்கப்படும்.

குறைந்த வருமான உதவித்தொகை (Reduced Income Allowance – RIA) என்பது, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட வருமான ஆதாரங்களை இழக்காதவர்களுக்கு வழங்கப்படும் மாற்று வருமான உதவியாகும். இது வருமான இழப்பை எதிர்கொள்ளும் நபர்களுக்கு நிதி ஆதரவாக வழங்கப்படுகிறது.

அதே நேரத்தில், விண்ணப்பதாரர் தனது அனைத்து வேலைகளையும் ஒரே நேரத்தில் இழந்திருந்தால், அவர் வேலை தேடல் உதவித்தொகை (JSA) மற்றும் குறைந்த வருமான உதவித்தொகை (RIA) ஆகிய இரண்டையும் பெற தகுதியுடையவராவார்.

RIA உதவித்தொகைக்கான செலுத்தும் விகிதங்களும் கால அளவும் வேலை தேடல் உதவித்தொகை திட்டத்திற்கு இணையானவை ஆகும். இந்த உதவித்தொகை ஒரே முறையாக (lump sum) பெறுநருக்கு வழங்கப்படும்.

மீண்டும் வேலை பெறும் ஊக்கத்தொகை (Early Re-employment Allowance – ERA) என்பது, வேலை தேடல் உதவித்தொகை (JSA) பெறும் காலத்திலேயே மீண்டும் வேலைக்கு திரும்பும் பெறுநர்களுக்கு வழங்கப்படும் ஊக்க தொகையாகும். வேலைக்கு விரைவாக திரும்ப ஊக்குவிக்கும் நோக்கில் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், வேலை தேடல் உதவித்தொகை (JSA) பெற தகுதியுடையவர்கள், வேலைவாய்ப்பு சேவை அதிகாரி (ESO) உடன் ஆலோசித்த பிறகு தொழில்திறன் பயிற்சிகளில் (vocational skills training) கலந்து கொள்ள பரிந்துரைக்கப்படலாம்.

இந்தப் பயிற்சிகளுக்கு RM4,000 வரை உள்ள செலவுகளை வேலைவாய்ப்பு காப்பீடு அமைப்பு (EIS) ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்கேற்கும் தகுதியுடைய பெறுநர்களுக்கு, அவர்களின் முந்தைய ஊதிய அளவை அடிப்படையாகக் கொண்டு நாளொன்றுக்கு RM10 முதல் RM20 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இந்த ஊக்கத்தொகையைப் பெற, பெறுநர்கள் கட்டாயமாக நிர்ணயிக்கப்பட்ட அனைத்து பயிற்சி அமர்வுகளிலும் முழுமையாக கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.