டாங் வாங்கி போலீஸ் தலைவரைக் காயப்படுத்திய இளைஞர் 100 மணிநேரம் சமூக சேவை செய்ய உத்தரவு

4 பிப்ரவரி 2026, 8:56 AM
டாங் வாங்கி போலீஸ் தலைவரைக் காயப்படுத்திய இளைஞர் 100 மணிநேரம் சமூக சேவை செய்ய உத்தரவு

கோலாலம்பூர், பிப் 4- முன்னாள் டாங் வாங்கி போலீஸ் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமானைத் தாக்கிய இளைஞர் ஒருவர் 100 மணிநேரம் சமூக சேவையை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளார்.

இந்த தகவலை அந்த ஆடவரை பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் முகம்மட் நஜிப் அஹ்மட் இதனை கூறினார்.

ஆறு மாதத்திற்குள் அந்த இளைஞர் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையை சமூக நல இலாகாவினர் கண்காணிப்பர் என்று தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, சுலிஸ்மி அஃபெண்டியைத் தாக்கியதாக இளைஞர் மீது குற்றஞ்ச்சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி கம்போங் சுங்கை பாரு, ஜாலான் டத்தோ அப்துல் மாலிக் எனும் பகுதியில் இந்த குற்றத்தை அவர் புரிந்தார்

குற்றவியல் சட்டத்தின் செக்‌ஷன் 332இன் கீழ் அந்த இளைஞர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.