கோலாலம்பூர், செப். 11- டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சுசில்மி அஃபாண்டி சுலைமான், கம்போங் சுங்கை பாரு பகுதியில் குடியிருப்புகளை காலி செய்யும் ஒரு நடவடிக்கையின் போது காயம் அடைந்தார்.
இந்த சம்பவம், அப்பகுதியில் குடியிருப்பவர்கள் இடம் பெயர்தலை மறுத்த போது ஏற்பட்ட குழப்பத்தில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் நடவடிக்கை நடைபெறும் இடத்துக்குள் புகுந்து செல்ல முயன்றபோது, கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையின் மத்திய காப்பு படை (FRU) தடுத்தது.
அந்த நேரத்தில் அடையாளம் காணப்படாத சிலர் போலீசாரை நோக்கி பொருட்களை எறிந்ததாக கூறப்படுகிறது. அதில் ஒன்று சுசில்மியின் தலையை தாக்கியதாக நம்பப்படுகிறது.
பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் காவல்துறை பொதுமக்களை உடனடியாக கலைந்து செல்லுமாறு எச்சரித்தது, இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தது.
அதேசமயம், முகத்தில் இரத்தம் சொட்டிய சுசில்மி அவர்களின் புகைப்படம் சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
டாங் வாங்கி போலீஸ் தலைவர் குடியிருப்பு பிரச்சனையில் தாக்கப்பட்டார்
11 செப்டெம்பர் 2025, 7:22 AM