கோலாலம்பூர், பிப் 4- மலேசியாவின் கிழக்கு கரையில் உள்ள சபா, சரவாக் மாநிலங்களின் இந்தோனேசியா நாட்டுடனான எல்லைகள் தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்நிலையில் சுமார் 5207 ஹெக்டர் நிலம் இந்தோனேசியா நாட்டிற்கு வழங்கப்பட்டு விட்டதாக எதிர்கட்சியினர் கொண்டு வந்த கூற்றையும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் மறுத்தார்.
மலேசியா இந்தோனேசியாவின் புதிய எல்லைகள் தொடர்பாக சட்டமன்றம் மற்றும் மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திடம் இணக்கம் பெற வேண்டும். இதுவரை புதிய எல்லைகள் வரையறை தொடர்பான மலேசியா - இந்தோனேசியா பேச்சுவார்த்தைகள் இன்னும் முதற்கட்டத்திலேயே உள்ளது என்று அன்வார் விவரித்தார்.
எந்தவொரு எல்லை மாற்றத்தை வெறுமனே பேச்சுவார்த்தையின் மூலம் செய்துவிட முடியாது கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின் 2ஆவது விதியை மேற்கொள் காட்டி அன்வார் எடுத்துரைத்தார்.


